யுவன் சங்கர் ராஜா ஒரு வருடமாக இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு ஆண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுவது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பார்த்து இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் விவாதம் நடக்கிறது.
இந்நிலையில் யுவனுக்கு நெருக்கமான ஒருவர் இது குறித்து கூறுகையில்,

அம்மா செல்லம்
யுவன் அவரது தாயின் செல்லம். அவர் மறைவுக்கு பிறகு யுவன் கவலையில் ஆழ்ந்தார். அப்போது அவர் ஆன்மீக குரு ஒருவரை சந்தித்தார்.

இஸ்லாம்
ஆனால் யுவன் சங்கர் ராஜா எந்த காரணத்தால் இஸ்லாத்தை பின்பற்றுகிறார் என்று தெரியவில்லை. அவர் ஓராண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார்.

தொழுகை
யுவன் ஒரு நேர தொழுகையை கூட விடுவது இல்லை. வேலை இருந்தாலும் ஸ்டுடியோவில் தொழுகைக்கு நேரத்தை ஒதுக்கிவிடுவார். அவர் இஸ்லாத்திற்கு மாறும் திட்டத்தில் உள்ளார்.

பெயர் மாற்றம்
யுவன் தனது பெயரையும் மாற்ற நினைத்துள்ளார். ஆனால் இது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. இது அவருடைய சொந்த விஷயம் குறித்த முடிவு என்பதால் அதை அவரது குடும்பத்தார் மதிக்கிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











