குட்டி தேவதைக்காக ஸ்பெஷல் வீடியோ... உருகிய யுவன்சங்கர் ராஜா...வைரலாகும் வீடியோ

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகில் தனது இசை பயணத்தை துவக்கினார். இந்த படம் 1997 ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று ரிலீசானது.

இந்த 23 ஆண்டு கால இசைப்பயணத்தில் ஏராளமான படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் யுவன்சங்கர் ராஜா. இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் யுவன்சங்கர் ராஜா அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் எனலாம்.

ஃபேவரைட் இசையமைப்பாளர்

ஃபேவரைட் இசையமைப்பாளர்

குறிப்பாக பின்னணி இசையில் பலரின் ஃபேவரைட் இசையமைப்பாளராக இருப்பவர் யுவன்சங்கர் ராஜா தான். தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் அஜித்தின் வலிமை படத்திற்காக இசையமைத்து வருகிறார்.

மகளுக்காக ஸ்பெஷல் வீடியோ

மகளுக்காக ஸ்பெஷல் வீடியோ

இந்நிலையில் யுவன்சங்கர் ராஜாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருக்கக் கூடிய யுவன், அடிக்கடி ஏதாவது பதிவை வெளியிட்டு, நெட்டிசன்களின் பாராட்டை பெற்று விடுவார். அப்படி தனது செல்ல மகளுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார் யுவன்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

தனது மகள் ஜிவாவின் கைகளை பிடித்துக் கொண்டு யுவன் நடந்து செல்வதை போன்று அமைந்த அந்த வீடியோவின் பின்னணியில், தான் இசையமைத்த ஹிட் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டுள்ளார் யுவன். 2013 ல் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற தந்தை - மகள் பாசத்தை சொல்லும் பாடலை தான் யுவன் ஒலிக்க செய்துள்ளார்.

பாராட்டை அள்ளிய பாடல்

பாராட்டை அள்ளிய பாடல்

தங்க மீன்கள் படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைத்தார். பல விருதுகளை வென்ற இந்த படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடல் மிகவும் பிரபலம். ஒளிப்பதிவு, இசை, காட்சி அமைப்பு, பின்னணி குரல், பாடல் வரிகள் என அவைத்து வகையிலும் பாராட்டை அள்ளி குவித்த பாடல் இது.

வைரலாகும் யுவனின் வீடியோ

வைரலாகும் யுவனின் வீடியோ

தனது மகளுக்காக யுவன் உருவாக்கி, பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதனை பாராட்டி ஏராளமானோர் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X