நிஜத்துல தள்ளியே இருங்க.. லவ் டுடே பாடல் குறித்து அட்வைஸ் சொன்ன யுவன்!

சென்னை : யுவன் இசையமைப்பில் லவ் டுடே படத்தின் 3வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பச்சை இலை என்ற இந்தப் பாடல் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதையடுத்து இந்தப் பாடல் குறித்தும் அதன் சர்ச்சை குறித்தும் தற்போது யுவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கோமாளி படத்தின் இயக்குநர்

கோமாளி படத்தின் இயக்குநர்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாவில் பல ஆண்டுகள் இருந்து கண்விழிக்கும் ஜெயம் ரவி, அனைவரிடமும் மிங்கிள் ஆக முடியாமல் திணறுவதும், அவரது இந்தக் குணமே அவருக்கு வெற்றியை கொடுப்பதாகவும் கோமாளி கதைக்களம் காணப்பட்டது.

பிரதீப் நடிப்பில் லவ் டுடே படம்

பிரதீப் நடிப்பில் லவ் டுடே படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் படத்தின் தலைப்போடு களமிறங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு ஹீரோவாகவும் மாறியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

சர்ச்சையில் பச்சை இலை பாடல்

சர்ச்சையில் பச்சை இலை பாடல்

இதனிடையே தற்போது பச்சை இலை என்ற 3வது பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் ஜாலியான இந்தப் பாடலில் பிரதீப் -யுவன் கூட்டணி சிறப்பான நடனத்தையும் கொடுத்துள்ளது. கூடவே பாடலில் ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடனமாடியுள்ளனர்.

முக்கிய கேரக்டரில் யோகிபாபு

முக்கிய கேரக்டரில் யோகிபாபு

தன்னுடைய கோமாளி படத்தில் யோகிபாபுவிற்கு காமெடியை தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தத் தெரியும் என்பதை பிரதீப் நிரூபித்திருந்தார். இதனிடையே தற்போது லவ் டுடே படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். இதனிடையே பச்ச இலை என்ற இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

யுவன் விளக்கம்

யுவன் விளக்கம்

இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே இந்த விமர்சனங்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பாடல் படத்தின் ஜாலியான தருணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஃபன்னான பாடல் என்று அவர் கூறியுள்ளார்.

தள்ளியே இருங்க

தள்ளியே இருங்க

நிஜ வாழ்க்கையில் போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து விலகியிருங்கள் என்றும் அதுவே தனது கோரிக்கை என்றும் யுவன் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். யுவனின் இந்த கோரிக்கையை ஆதரித்து ரசிகர்கள் அதிகமாக கமெண்ட் செய்து வருகின்றனர். போதையிலிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதற்காகவே யுவனின் பாடல்களை கேட்காமல் இருப்பதாக ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X