”சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு”: யுவன், “அதமட்டும் சொல்லாத” யுவனை செல்லமாக மிரட்டிய சூர்யா!

மதுரை: கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ஆடியோ வெளியீடு தான், கோலிவுட்டின் தற்போதைய டாப் செய்தியாக உள்ளது.

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற 'விருமன்' ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

கொம்பன் கூட்டணியில் விருமன்

கொம்பன் கூட்டணியில் விருமன்

'பருத்தி வீரன்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக்கு, கிராமத்து கெட்டப்புகளில் உருவாகும் படங்கள் என்றால் அல்வா மாதிரி. அதே பருத்தி வீரன் மோடில் இருந்தபடியே ரசிகர்களிடம் ரகளையாக ஸ்கோர் செய்வார். அதேபோல், கிராமத்துப் பின்னணியில் மட்டுமே படங்களை இயக்கிவரும் முத்தையா, முதன்முறையாக கார்த்தியுடன் 'கொம்பன்' படத்தில் இணைந்தார். அந்தப் படத்தின் வெற்றியால் தற்போது 'விருமன்' படத்திலும் இவர்கள் ஒன்று சேர்ந்தனர்.

கொஞ்சம் தரமான கூட்டணி

கொஞ்சம் தரமான கூட்டணி

ஆனாலும், 'கொம்பன்' படத்தை விட 'விருமன்' படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு காணப்பட்டது. காரணம் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக கமிட் ஆனார். அதுமட்டும் இல்லாமல், இயக்குநர் சங்கரின் மகள் அதிதி, விருமனில் நாயகியாக அறிமுகமாகிறார் என படக்குழு அறிவித்தது. மேலும், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியது

மதுரையில் ஆடியோ வெளியீடு

மதுரையில் ஆடியோ வெளியீடு

யுவன் இசையில் 'விருமன்' படத்தின் முதல் பாடல் வெளியாகி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீடு மதுரையில் கோலாகலமாக நேற்று நடந்தது. இது மதுரையே குலுங்கும் அளவிற்கு தரமான நிகழ்ச்சியாக அமைந்தது. இதில், இயக்குநர்கள் பாரதிராஜா, சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு

சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு

'விருமன்' ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட யுவன், மேடையேறியதுமே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், 'கஞ்சாப்பூவு கண்ணால' பாட்டைப் பாடி ரசிகர்களை கூல் செய்த யுவன், அடுத்தடுத்து தரமான சம்பவங்களை அடுக்கினார். அதில், "சூர்யா, கார்த்தி இருவருமே ஸ்கூல் டேஸ் நண்பர்கள், ஆனால், அப்போதெல்லாம் நான் ஒழுங்காக டிரஸ் செய்யாமல் போனால், சூர்யா என்னை விரட்டிக் கொண்டே இருப்பார். இருந்தாலும் எனக்கு சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு, ஐ லவ் சூர்யா, கார்த்தி" என பேசினார்.

யுவனை மிரட்டிய சூர்யா

யுவனை மிரட்டிய சூர்யா

தொடர்ந்து பேசிய யுவன், "சூர்யா என்னை விரட்டியதுக்கு பதிலாக, நான் அவருக்கு சூப்பரான சாங்ஸ்லாம் போட்டு ஆடவிட்டேன்" என கலாய்த்தார். "அதுமட்டுமா சூர்யா, கார்த்தின்னு ரெண்டு பேரையுமே பாடவச்சதும் நான் தான்" எனக் கூறியதோடு, "அஞ்சான் படத்துல அந்த ஏக் தோ தீன் சாங்" என ஆரம்பிக்கவும், சூர்யா கீழ இருந்தபடி "அதமட்டும் சொல்லிடாத யுவன்" என்பது போல கையை காட்டி ஜாலியாக மிரட்டினார். இதனால், அந்த இடமே கலகலப்பானது.

மனைவி சொல்மிக்க மந்திரம் இல்லை

மனைவி சொல்மிக்க மந்திரம் இல்லை

இறுதியாக "நான் எது செஞ்சாலும் என்னோட மனைவிகிட்ட கேட்டு தான் செய்வேன், நான் மட்டும் இல்ல எல்லாருமே அப்படித்தான்" என யுவன் சொல்லியதும், இயக்குநர் சங்கர், அவரின் மனைவி, நடிகர் சூர்யா உள்ளிட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். மேலும், விரைவில் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவேன் எனவும் யுவன் உறுதியளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X