எப்பவும் பார்க்குற சிம்புவை இதில் பார்க்க முடியாது...மாநாடு படம் குறித்து யுவன் சொன்ன ரகசியம்!
சென்னை: எப்போதும் பார்க்கும் நடிகர் சிம்புவை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா
இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

கண்ணீர்விட்டு அழுத சிம்பு
இந்நிகழ்ச்சியில் பேசிய சிம்பு தனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கப்படுவதாகவும் இதனால் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன் என்றார். அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கண்ணீர் விட்டு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

யுவன் சங்கர் ராஜா போல்..
விழா மேடையிலேயே நடிகர் சிம்பு கண்ணீர் விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலானது. மேலும் தனக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இடையிலான புரிதலையும் பேசிய சிம்பு, அவரை போன்று தன்னை தாங்கிக் கொள்ளும் பெண் வேண்டும் என்று கேட்டார்.

ஒரு விளையாட்டுதான் மாநாடு
அவரை தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, எப்போதும் பார்க்கும் சிம்புவை மாநாடு படத்தில் பார்க்க முடியாது என்றார். முற்றிலும் மாற்றாக வேறொரு சிம்புவை பார்க்கலாம் என்றும் யுவன் சங்கர் ராஜா கூறினார். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 25ஆம் தேதி ரிலீஸ்
மேலும் இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள் என்றும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது என்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். மாநாடு திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











