விஜய் படத்துக்கு போட்டோ.. அஜித் படத்துக்கு வீடியோ.. என்ன யுவன் இதெல்லாம்?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் யாரும் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்ககூடிய நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடியில் இருந்து ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் என பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து தனது 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

தி கோட் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான தகவலை படத்தின் இயக்குநர் வெங்கட்ர் பிரபு கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Yuvan Shankar Raaja The GOAT Vijay

தமிழ் சினிமாவில் ஒரு சிலரது குடும்பங்கள் மட்டுமே முழுக்க முழுக்க சினிமா குடும்பமாக உள்ளது. அதில் ஒரு குடும்பம் இசையமைப்பாளர் இளையராஜாவின் குடும்பத்தை கூறலாம். இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக உள்ளார். இளையராஜாவின் தம்பியான இயக்குநர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குநராக உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

விஜய்: நடிகர் விஜய் தி கோட் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டார் எனவும், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது என வெங்கட் பிரபு மற்றும் அவரது உதவி இயக்குநர்களை விஜய் பாராட்டியதாக மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் பாதியைத் பார்த்த விஜய் இரண்டாம் பாதியும் சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் கூறியதாகவும் கூறுகின்றனர். இதனால் தி கோட் படம் விஜய்க்கே பிடித்துப் போனதால் அவரது ரசிகர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கவனமாக இருப்பதாக கூறுகின்றனர்.

Yuvan Shankar Raaja The GOAT Vijay

தொல்லை: இந்நிலையில் தி கோட் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளின்போது எடுத்த புகைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு "இவங்க தொல்லை தாங்க முடியல" என கேப்ஷன் இட்டுள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த போஸ்ட் வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் ஆர்வமாகிவிட்டனர். குறிப்பாக மூன்றாவது பாடல் எப்போது ரிலீஸ் என கேட்டு வருகின்றனர்.

Yuvan Shankar Raaja The GOAT Vijay

தி கோட்: விஜய் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ள நிலையில், இவரது கடைசி இரண்டு படங்களில் ஒரு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார். அதேபோல் விஜய் நடித்த படங்களில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இரண்டாவது படம் இதுதான். இதற்கு முன்னர் புதிய கீதை என்ற படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

மங்காத்தா: யுவன் இப்போது புகைப்படம் வெளியிட்டுள்ளதைப் போல், அஜித்தின் மங்காத்த படத்திற்காக பாடல் உருக்கப் பணிகளின் போது எடுத்த வீடியோவும் இணையத்தில் உலா வருகின்றது. அந்த வீடியோவில், யுவன் ஷங்கர் ராஜா, 'பாடலுக்கான சுட்சுவேஷன் கூறினால் மட்டும்தான் நான் பாடல் உருவாக்க முடியும் எனக் கூற, அதற்கு வெங்கட் பிரபுவோ சுட்சுவேஷன் சொல்லத் தெரியலங்க என விளையாட்டாக புலம்புகின்றார். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மங்காத்தா படம் அஜித்தின் 50வது படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தது. இதேபோல் வீடியோ ஒன்றை தி கோட் படத்தின் பணிகளின் போதும் எடுத்திருந்தால் பகிருங்கள் யுவன் என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

Yuvan Shankar Raaja The GOAT Vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X