தூத்துக்குடி கொத்தனார்.. யுவன் சங்கர் ராஜாவையும் விடலையா?.. விஜே சித்து ரியோவை வச்சு செஞ்சிட்டாரே!
சென்னை: பீப் சாங்கை விட பச்சையாக ஆபாச வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ள "தூத்துக்குடி கொத்தனார்" பாடலை இன்றைய ஓடிடி கால இளைஞர்கள் ஓபனாகவே கேட்கத் தொடங்கிவிட்டனர். மேலும், சோஷியல் மீடியாவில் பலர் அந்த ஆபாச பாடல் குறித்து எழுதவும் எடிட் வீடியோக்களை உருவாக்கி போட்டும் வருகின்றனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் படத்தின் புரமோஷனுக்கு அந்த பாடலை பயன்படுத்தி உள்ளனர்.
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என விஜய் டிவி சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் இவரும் ஹீரோவாக மாறி அசத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரியோ ராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2023ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், அந்த வரிசையில் ஸ்வீட் ஹார்ட் படம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் இணைந்து ஃபன் பண்ணும் மொட்டை மாடி பார்ட்டிக்கு யுவன் சங்கர் ராஜாவுடன் ரியோ ராஜும் பங்கேற்ற வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும், ஜோ படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு சமீபத்தில் நிறம் மாறும் உலகில் படத்திலும் ரியோ ராஜ் நடித்திருந்தார். அந்த படம் பெரிதாக ஓடாத நிலையில், அடுத்ததாக ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் வரும் மார்ச் 14ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லர் இளைஞர்களை கவர்ந்த நிலையில் படத்தின் புரமோஷனுக்காக யுவன் சங்கர் ராஜா மற்றும் ரியோ ராஜ் மொட்டை மாடி பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
டாடா 2; டிராகன் படத்தை எப்படி டான் 2 என கலாய்த்தார்களோ அதே போல ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் படத்தை பேச்சுலர் 2, டாடா 2 மற்றும் ஆதலால் காதல் செய்வீர் 2 என விஜே சித்துவும் ஹர்ஷத்தும் கலாய்க்க ஆரம்பிக்க, படத்தின் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா இந்த படம் டாடா 2 என்றும் ஆதலால் காதல் செய்வீர் 2வாக இருக்கலாம் என்றும் ஒப்புக் கொண்டு இப்படி இயக்குநர் தன்னை ஏமாற்றிவிட்டாரே என்றார்.
தூத்துக்குடி கொத்தனார்: சமூக வலைதளங்கள் முழுவதும் ஆபாச பாடலான தூத்துக்குடி கொத்தனார் டிரெண்டாகி வரும் நிலையில், அதை வைத்து புதுவித புரமோஷனை செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஸ்வீட் ஹார்ட் படத்தில் பாடலாசிரியராக மாறியுள்ள ரியோ ராஜுக்கு தூத்துக்குடி கொத்தனார் வரிகளை விஜே சித்து கொடுக்க அடுத்த வரிகளாக நல்ல வீடு கட்டினார் என்று எழுதினார். பக்கத்துல பாம்பு வரிகளுக்கு அடுத்து என்னை மட்டும் நம்பு என்கிற வரிகளை எழுதினார். நீ ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதை என்றும் வரிகள் நீள யுவன் சங்கர் ராஜாவை வச்சு என்னடா ஃபன் பண்றீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் புரமோஷனுக்கு இப்படியா பண்ணுவீங்க என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











