Yuvan : ஸ்வீட் ஹார்ட் .. ஜெயித்துக் காட்டிய ரியோ.. ஹேப்பி மோடில் யுவன்.. ஒரே பாராட்டு மழை..
சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இந்த படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரியோவின் முந்தைய படமான ஜோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து படத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்வீட் ஹார்ட் படத்தை பொறுத்தவரையில் படம் பார்த்த பலரும் இந்த படம் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால், படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிட்டது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே படத்தை ஓடிடி தளத்தில் நல்ல விலைக்கு விற்று விட்டதால், படக்குழு பெரிய லாபத்துடன் நிம்மதியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ' ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியான. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், 'படம் நன்றாக இருக்கிறது' என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யுவன்: இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக்குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
பாராட்டு: காதலர்களுக்கிடையே ஏற்படும் உரசலும், விரிசலும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமான பின்னணியிலும் விவரித்திருப்பதால் இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக காதலர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சி: தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா படக்குழுவினரை பாராட்டியுள்ளதால், படக்குழுவினர் செம மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா படத்தை முதலில் பார்த்துவிட்டு, இந்த படம் கட்டாயம் ஒர்க்-அவுட் ஆகும் எனவே, தைரியமாக இருக்கலாம் எனக் கூறினாராம். மேலும் இதேபோல் ஃபீல் குட் எண்ணம் கொடுக்க கூடிய கதைகள் இருந்தால் தானே தயாரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தாராம். இதனால் இயக்குநர் ஸ்வீநித் சுகுமார் மகிழ்ச்சியில் உள்ளார் என கூறப்படுகிறது.

மணிகண்டன்: படம் ரிலீஸ்க்கு முன்னர் பிரபலங்களுக்காக ஒரு காட்சி சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு படம் பார்த்த நடிகர் மணிகண்டன் கூறும்போது, இந்த படம் நவீன காலத்தில் இருக்கும் உறவுகள் குறித்து மிகவும் அழகாக பேசுகிறது. படத்தில் நடித்தவர்கள் தொடங்கி, படம் தொழில்நுட்பமாகவும் மிகவும் ஸ்ட்ராங்கான படமாக உள்ளது.அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பாருங்கள் என தெரிவித்தார்.
மைம் கோபி: படம் குறித்து நடிகர் மைம் கோபி பேசுகையில், " நாயகன் ரியோ படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படம் இளைஞர்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் காதல் எப்படி உள்ளது என்பதை சிறப்பாக காட்டியுள்ளார்கள். இயக்குநருக்கு பெரிய வாழ்த்துகள். படம் பார்க்கும்போது நாம் அந்த கதைக்குள் இருப்பதைப் போல் இருந்தது. நிச்சயம் இந்த படம் சிறந்த படமாக இருக்கும்" என மைம் கோபி தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
சௌந்தர்யா: அதேபோல், பிக் பாஸ் சௌந்தர்யா கூறும்போது, " படம் ஃபீல் குட் மூவியாக உள்ளது. ரியோவின் ஜோ படத்துடன் ஒப்பிடும்போது இந்த படத்தில் அதிகப்படியான எமோஷன்ஸ் பார்க்கலாம். காதல் மற்றும் மற்ற உறவுகள் குறித்து இந்த படத்தில் சிறப்பாக காட்டியுள்ளார்கள். எல்லோருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இந்த படம் சிறந்த படமாக இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனத் விமர்சித்தார்.
விஜே பார்வதி: அதேபோல் விஜே பார்வதி படம் குறித்து பேசும்போது, " படம் மிகவும் முக்கியமான விஷயத்தை பேசியுள்ளது. படம் கருக்கலைப்பு அதாவது அபார்ஷன் குறித்து பேசியுள்ளது. அதை மிகவும் சீரியஸாக சொல்லாமல் ஜாலியாக சொல்லியுள்ளார்கள். அபார்ஷன் என்றால் பெண்களுக்குத்தான் வலி, இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தில் அந்த வலியை ஆண்களுக்கும் கடத்தும் விதமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். எல்லோரும் இந்த படத்தை பார்த்து அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்" என கூறினார்.
ரம்பா: நடிகை ரம்பா கூறும்போது, இந்த படம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் மூலம் காதலியை நினைவு கூறலாம், மனைவியை நினைவு கூறலாம் மற்றும் அம்மாவை நினைவு கூறலாம். குடும்பத்தை குடும்ப உறவுகளை மையமாக கொண்ட படமாக ஸ்வீட் ஹார்ட் உள்ளது. சில இடங்களில் நான் அழுதுவிட்டேன். சில இடங்களில் நன்றாக சிரித்தேன். இந்த படம் கிளைமாக்ஸில் சொல்லியுள்ள விஷயம் மனதிற்கு நெருக்கமானதாக இருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.
ப்ளூ சட்டை மாறன்: பிரபலங்கள் பலரும் இப்படிக் கூற, விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து தனது விமர்சனத்தில், மாடர்ன் லவ் என படத்தை தொடங்கிவிட்டதால், படத்தை முடிக்கும் போது, ஆண் பெண் உறவு குறித்தோ, குடும்ப வாழ்க்கை குறித்தோ, குழந்தை குறித்தோ கருத்து பேசி முடிப்பார்கள் என நினைத்தால், என் குடும்பம் மட்டுமா மோசமான குடும்பம், உனது குடும்பமும் தான் மோசமான குடும்பம் என முடித்துள்ளார்கள். ஒரு படத்தில் வடிவேலு காமெடியில், வருவதைப்போல, சின்ன வயசில் இருந்தே, நான் அவன் குடும்பத்தை கேவலமாக பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்பவும் கேவலமாக பேசுவான் என வருவது போல் படத்தை எடுத்து வைத்துள்ளர்கள்" என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











