“இசை அரசன்" யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று பிறந்தநாள்... தெறிக்கும் வாழ்த்துக்கள் !

சென்னை : தன்னுடைய மயக்கும் இசையின் மூலம் ரசிகர்களை காதல் வலையில் விழ வைத்து வரும் யுவன் சங்கர் ராஜா இன்று வரை இளசுகளின் ஃபேவரேட் இசையமைப்பாளராக நிமிர்ந்து நிற்கிறார்.

Recommended Video

Pudhupettai movie review | Pudhupettai movie explained

இளையராஜா, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்து வந்த வேளையில் இளசுகளுக்கு பிடித்தார் போல் புதுவிதமான இசையை கொடுத்து இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார்.

மிகப் பெரிய இசையமைப்பாளராகவும், பாடகராகவும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இணையதளத்தை தெறிக்க விடுகின்றனர்.

இளசுகளின் ஃபேவரேட்

இளசுகளின் ஃபேவரேட்

ஹிந்திப் பாடல்களின் மோகத்தால் தமிழ் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், தனது இசையின் மூலம் ஹிந்தி திரைப்படத் துறையையே அதிர வைத்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு என்றுமே உள்ளது. இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா அதேபோல் இன்றுவரை அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்து இளசுகளின் ஃபேவரேட் மியூசிக் டைரக்டராக இருந்து வருகிறார்.

துள்ளுவதோ இளமை

துள்ளுவதோ இளமை

தனது 16-வது வயதிலேயே இசையமைக்க ஆரம்பித்த யுவன் சங்கர் ராஜா, 1997 ஆம் ஆண்டு வெளியான "அரவிந்தன்" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அரவிந்தன் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை அமைத்து கொண்டிருந்த யுவன் சங்கர் ராஜா "துள்ளுவதோ இளமை" திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

"யூத் ஐகான்"

வயதில் மட்டுமல்லாமல் இசையிலும் இளமை துள்ளலுடன் அனைவரையும் கவரும் வகையில் பாடல்களுக்கு இசையமைத்து வந்த யுவன் அனைவராலும் "யூத் ஐகான்" என அழைக்கப்பட்டார். இன்று வரை தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஆல்பம்களை எடுத்து பார்த்தால் அதில் நிச்சயம் யுவன் சங்கர் ராஜாவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

புதுப்பேட்டை

புதுப்பேட்டை

யுவன் சங்கர் ராஜா, செல்வராகவன் கூட்டணி மிகப் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இணையும் அனைத்து திரைப்படங்களின் பாடல்களும் படங்களும் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த தோடு மிகப்பெரிய வெற்றி பெற்றும் வருகிறது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை மற்றும் சமீபத்தில் வெளியான என் ஜி கே என மிகப் பிரபலமாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

அடிமையான ரசிகர்கள்

அடிமையான ரசிகர்கள்

அற்புதமான இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கும் பல்வேறு திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு மட்டும் அடிமையான ரசிகர்கள் அவரது குரலுக்கும் அடிமை ஆகியுள்ள நிலையில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடகர் என பல்வேறு விருதுகளை இன்று வரை குவித்து வருகிறார்.

சிப்ரஸ் அவார்ட்

சிப்ரஸ் அவார்ட்

பிலிம்பேர் விருதுகள் தமிழ்நாடு அரசு விருதுகள், விஜய் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள யுவன் சங்கர் ராஜா 2006 ஆம் ஆண்டு "சிப்ரஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்" விழாவில் சிறந்த இசையமைப்பாளராக "ராம்"திரைப்படத்திற்கு கௌரவிக்கப்பட்டார். மேலும் இந்தியாவிலேயே யுவன் சங்கர் ராஜா மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளராகவும்

தயாரிப்பாளராகவும்

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் வெளியான "பியார் பிரேமா காதல்" என்ற திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"இசை அரசனாக"

இவ்வாறு தமிழ் சினிமாவில் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இளம் ரசிகர் பட்டாளத்துடன் இன்றுவரை "இசை அரசனாக" கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 31

ஆகஸ்ட் 31

இளைஞர்களின் நாடித் துடிப்பாக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி திரைப்பிரபலங்கள் விக்னேஷ் சிவன், தனுஷ், செல்வராகவன், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayYuvan என தங்களது வாழ்த்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X