அந்த படத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. திடீரென யுவன் சங்கர் ராஜா போட்ட ட்வீட்.. என்னாச்சு?

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர்.

அஜித்தின் வலிமை படத்தில் இவர் இசையமைத்து வந்த போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலகி விட்டார். மற்ற இசை பணிகளை ஜிப்ரான் தான் கவனித்து வந்தார்.

Yuvan Shankar Raja clarifies he never approached for RK Suresh s Then Mavattam movie

சமீபத்தில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் இடம்பெற்ற "மறுபடி நீ" பாடல் வேறலெவலில் ரசிகர்களை கவர்ந்தது. அந்த பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருந்தார்.

ஆர்.கே. சுரேஷ் தென் மாவட்டம் போஸ்டர்: ஆர்.கே. சுரேஷ் எழுதி, இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில், நடைபெற்ற காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆருத்ரா கோல்டு மோசடி குறித்தும் தான் யாரையும் ஏமாற்றவில்லை என பேசியிருந்தார். இந்நிலையில், அவர் வெளியிட்ட போஸ்டரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'தென் மாவட்டம்' படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

யுவன் சங்கர் ராஜா அதிரடி: பத்திரிகை நண்பர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை க்ளியர் பண்ண விரும்புறேன். நான் இந்த படத்தில் பணியாற்றவில்லை. யாரும் இதுவரை பணியாற்ற வேண்டும் என அணுகவும் இல்லை என அதிரடியாக ட்வீட் ஒன்றை போட்டு ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

அனைத்து அரசியல் தலைவரையும் தெரியும்: காடுவெட்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் ஆருத்ரா மோசடி வழக்கில் போலீஸார் கைதுக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர், தன் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறிய ஆர்.கே. சுரேஷ் காடுவெட்டி படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே. சுரேஷ் தனக்கு அனைத்து அரசியல் தலைவர்களையும் தெரியும் என்றும் இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை என்றும் கூறியிருந்தார்.

வம்பே வேண்டாம்: ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரது இயக்கத்தில் சாதிய படமாக உருவாகும் தென் மாவட்டம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை என வந்த அறிவிப்பை பார்த்து ஷாக்கான அவர், உடனடியாக அந்த படத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ட்வீட் போட்டுள்ளார்.

Yuvan Shankar Raja clarifies he never approached for RK Suresh s Then Mavattam movie

கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்: யுவன் சங்கர் ராஜா ட்வீட் போட்டதும் நல்ல விஷயம் பண்ணீங்க என பாராட்டிய விஜய் ரசிகர்கள் உடனடியாக கோட் படத்தின் அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஏதாவது ஒரு அப்டேட்டை தட்டி விடுங்க பாஸ் என கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே வெங்கட் பிரபு இப்போதைக்கு அப்டேட் ஏதும் வராது என்றும் சிஜி பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். மே மாதத்திற்கு பிறகு தான் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் என்றும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X