மீண்டும் வந்த பவதாரிணி.. ‘கோட்’ செகண்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியானது.. தளபதி சும்மா தாலாட்டுறாரே!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குறித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கொண்டாடப் போவதில்லை என அறிவித்து விட்டார்.
ஆனால், தனது ரசிகர்களுக்காக கோட் படத்தின் அப்டேட்களை மட்டும் வெளியிட்டு வருகிறார். நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ள கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரலை ஏஐ மூலம் அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா கொண்டு வந்து ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். நிச்சயம் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பிறந்தநாள்: 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பிறந்த நடிகர் விஜய் நாளை தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் ரீதியான கொண்டாட்டங்களுக்கு தலை விதித்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சார்ந்தவர்களை கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செகண்ட் சிங்கிள்: வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இணைந்து பாடிய " சின்ன சின்ன கண்கள்" எனும் குடும்ப பாடல் நாளை வெளியாகும் நிலையில், அதன் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது.
மீண்டும் வந்த பவதாரிணி: ஏஐ தொழில்நுட்பம் மூலமாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் தனது சகோதரி பவதாரிணியின் குரலை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி பாடகி பவாதாரிணி உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது அவரது குரல் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்துள்ளது.
தாலாட்டும் விஜய்: அந்த ஹம்மிங்கே தாறுமாறாக இருக்கிறது என்றும் தளபதி விஜய் ரசிகர்களை தாலாட்டும் விதமாக இந்த பாடல் உருவாகியுள்ளது என விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த பாடல் போதும் என வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சிலர் வெறித்தனமாக எதிர்பார்த்தால் இப்படி தளபதி தாலாட்டி விட்டார் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











