இளையராஜா பயோபிக்... இயக்குனர் ஆகறது... இதெல்லாம் இல்லையாமே? நோ என்கிறார் யுவன் சங்கர் ராஜா
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை கதையை இயக்க இருப்பதாக வந்த தகவலை மறுத்துள்ளார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் இப்போது சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் என்.டி.ஆர், நடிகை சாவித்ரி, கிரிக்கெட் விரர்கள் சச்சின், தோனி உட்பட பலரின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்பட்டுள்ளன.
இப்போது ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை கதை, சூரரைப் போற்று படமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யா நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இளையராஜா
இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்க இருக்கிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

ராஜா தி ஜர்னி
இந்தப் படம் மூலம் இயக்குநர் ஆக இருப்பதாகவும் அந்தப் படத்துக்கு, ராஜா தி ஜர்னி என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் சொன்னதாகவும் கூறப்பட்டன.

நடிகர் தனுஷ்
இதில் நடிக்க, யார் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டபோது, நடிகர் தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்று யுவன் சங்கர்ராஜா தெரிவித்தாக செய்தி வந்தது. இதனால் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை கதை படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

மறுப்பு
இந்நிலையில் இதை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மறுத்துள்ளார். அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ள யுவன் சங்கர், இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இப்போது சுமார் 10 படங்களுக்கு இசை அமைத்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











