25 ஆண்டு இசைப்பயணம்… எல்லாம் உங்களால் தான்… யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி !
சென்னை : இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரைத்துறையில் நுழைந்து இன்னோடு 25ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
Recommended Video
தொலைக்காட்சி,ரேடியோ, சோஷியல் மீடியா என அனைத்திலும் லாபித்து இருக்கிறார் யுவன்சங்கர். காதலோ, சோகமோ, மகிழ்ச்சியோ என அன்றைய பொழுதை அழகாக்கிவிடும் யுவனின் இசை.
ஒரு திரைப்படத்திற்கு நல்ல கதை மட்டும் முக்கியமில்லை அதையும் தாண்டி இசை உயிர்நாடியாக படத்தில் பின்னிபிணைந்துள்ளது என்பதை நிரூபித்தவர் யுவன் சங்கர் ராஜா.

யுவன் சங்கர் ராஜா
இசைஞானி இளையராஜாவிற்கும் மேலாக இசையுலகில் தனி ராஜாங்கமே நடத்தி கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997ல் தனது 16வது வயதில் அறிமுகமான யுவனுக்கு இந்தியாவிலேயே இளம் வயதில் அறிமுகமான இசையமைப்பாளர் என்ற பெருமை உண்டு. அரவிந்தன் திரைப்படத்தில் தொடங்கிய அவரது இசைப்பயணத்தை இன்றோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

25 ஆண்டு இசைப்பயணம்
திரைத்துறையில் தனது 25 ஆண்டு பயணம் குறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி யுவன் சங்கர் ராஜா, இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வளர்ச்சியையும் தாழ்வையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள் என்றைக்கும் உங்களுடைய சப்போர்ட் இருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லாம் ரசிகர்களாகிய உங்களால்தான்
அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன. இதுவரையான என் இசைப்பயணம் மகிழ்ச்சியாக பயணிக்க ரசிகர்களாகி உங்களின் ஆதரவுதான் காரணம். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது என்றார்.

25 வருடம் வேகமாக சென்றுவிட்டது
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். 25 வருடம் எப்படி வேகமாக சென்றது என்றே எனக்கு தெரியவில்லை. இன்னும், ஆரம்பத்தில் எந்த இடத்தில் இருந்தேனோ அப்படி இருப்பது போலத்தான் தெரிகிறது என்று உணர்ச்சி பொங்க செய்தியாளர்களிடம் பேசினார்.


Click it and Unblock the Notifications











