இந்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்...யுவன் வெளியிட்ட கலக்கல் வலிமை அப்டேட்

சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 60 வது படமான வலிமை தற்போது தயாராகி வருகிறது. பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை மாறி உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது.

சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 60 வது படமான வலிமை தற்போது தயாராகி வருகிறது. பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை மாறி உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது. இறுதி கட்டத்தில் இருக்கும் வலிமை சூட்டிங் பற்றிய அப்டேட்டை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெளிநாட்டில் நடக்க உள்ள 10 நாள் சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளது. இதில் வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படலாம் என கூறப்படுகிறது. 2018 ல் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் துவங்கப்பட்ட வலிமை படம் பற்றி எந்த அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் பாட்டெழுதி உள்ளார். ஓடிசாவில் இருந்து பல அதிரடி நாட்டுப்புற டிரம்ஸ் கலைஞர்கள் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருவதாக அப்டேட் வெளியானது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய யுவன்சங்கர் ராஜா, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் புரோமோஷன் தொடர்பான வேலைகள் தயாராகி வருவதாக கூறி இருந்தார். இதனால் இந்த மாதத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி கட்டத்தில் இருக்கும் வலிமை சூட்டிங் பற்றிய அப்டேட்டை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெளிநாட்டில் நடக்க உள்ள 10 நாள் சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளது. இதில் வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2018 ல் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் துவங்கப்பட்ட வலிமை படம் பற்றி எந்த அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் பாட்டெழுதி உள்ளார். ஓடிசாவில் இருந்து பல அதிரடி நாட்டுப்புற டிரம்ஸ் கலைஞர்கள் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருவதாக அப்டேட் வெளியானது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய யுவன்சங்கர் ராஜா, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் புரோமோஷன் தொடர்பான வேலைகள் தயாராகி வருவதாக கூறி இருந்தார். இதனால் இந்த மாதத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X