Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்... உங்களுக்கு போட்டுக் காட்டணும்... யுவன் அப்டேட்
சென்னை : நடிகர் தனுஷ் -இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.
ஆகஸ்ட் 20ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் இதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்லக்குட்டி… தங்கச்சியுடன் கொஞ்சி விளையாடும் நேகா மேனன்… வைரல் பிக்ஸ் !
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் படம் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நானே வருவேன் படம்
நடிகர் தனுஷ் மற்றும் அவரது சகோதரர் இயக்குநர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் காம்போவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ல் துவங்கவுள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தாணு பெருமிதம்
மேலும் அவர் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்து லாப்டாப்பில் ஒரு சீனை பார்ப்பது போல அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் இந்த கூட்டணியுடன் பணியாற்றுவது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
2வது பாடல்
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முன்னதாக செல்வராகவனுடன் 8வது முறையாக இணைவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலுக்காக தான் தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜனவரி 14ல் அறிவிப்பு
மேலும் அந்த பாடல்களை படக்குழுவினருக்கு போட்டுக் காட்ட ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி 14ல் வெளியானது. அப்போது வெளியான பர்ஸ்ட் லுக்கில் பின்புலத்தில் பெரிய வீடு எரிந்துக் கொண்டிருக்கையில் தனுஷ் சிகரெட் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருப்பது போன்று காணப்பட்டார். இந்த போஸ்டர் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.