அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் யுவன் -விஷால் கூட்டணி... யுவன் என்ன சொல்றாரு பாருங்க
சென்னை : நடிகர் விஷால் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 26ம் தேதி வெளியாக உள்ள படம் வீரமே வாகை சூடும்.
படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது.

வீரமே வாகை சூடும் படம்
நடிகர் விஷால், டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குநர் து. பா சரவணன் படத்தை இயக்கியுள்ளார். படத்தை விஷாலின் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் குஷி
முன்னதாக கடந்த தீபாவளியையொட்டி விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் வெளியான எனிமி படம் விஷாலுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் இரண்டு மாத இடைவெளியில் அவரது அடுத்த படம் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

யுவன் -விஷால் கூட்டணி
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஐதராபாத்திலும் சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்தக் கூட்டணி ஏற்கனவே பல ஹிட்களை கொடுத்துள்ள நிலையில் இந்தப் படமும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம்.

பத்திரிகையாளர் சந்திப்பு
முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு நடத்தி முடித்துள்ளது. இதில் விஷால், டிம்பிள் மற்றும் யுவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

படத்தின் வெற்றி உறுதி -யுவன்
நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் பாடல்கள் வரவேற்பை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மற்ற படங்களை போல இல்லாமல் இந்தப்படத்தில் இயற்கையான வகையில் மெட்டமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறப்பாக நடித்துள்ள விஷால்
படத்தின் இயக்குநர் மிகவும் சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளதாகவும் எப்போதும் போல விஷாலும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவை சிறப்பாக அமைந்துள்ளதாகவும் யுவன் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











