பாட்டு சூப்பரப்பு... புது இசை அமைப்பாளரின் ஆடியோவை வாங்கிய யுவன் சங்கர் ராஜா
சென்னை: அறிமுக இசை அமைப்பாளர்களின் வணிகன் பட ஆடியோ உரிமையை, வாங்கியிருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
பெஸ்டஸ் என்ற நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிக்கும் படம், வணிகன்.
நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்த ஆனந்த் நாக் ஹீரோவாக நடிக்கிறார். நக்ஷத்திரா நாகேஷ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுரேஷ்குமார். டி.ஆர். புவனேஷ் செல்வனேஷன் இசை அமைத்துள்ளனர். அகஸ்டின் இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். டேனியல் வி.பி எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

படம் அவர் கூறும்போது, இது யதார்த்தமான திரில்லர் படம். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை கையாண்டிருக்கிறோம். இதன் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு பாடலை பாடியுள்ளார். யுவன் சங்கர் வெளியிட்ட அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது' என்றார்.


Click it and Unblock the Notifications











