சினிமாவாகிறது இளையராஜா வாழ்க்கை... அவர் பொருத்தமாக இருப்பார்... ஹீரோவை அறிவித்த யுவன் சங்கர் ராஜா
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுக்க இருப்பதாக இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் இப்போது சினிமாவாக்கப்பட்டு வருகிறது. நடிகர் என்.டி.ஆர், நடிகை சாவித்ரி, கிரிக்கெட் விரர்கள் சச்சின், தோனி உட்பட பலரின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்பட்டுள்ளன.
இப்போது ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை கதை, சூரரைப் போற்று படமாக உருவாகியுள்ளது.

இசைஞானி
இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையை திரைப்படமாக்க விரும்புவதாக இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

ராஜா தி ஜர்னி
இந்தப் படம் மூலம் இயக்குநர் ஆக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், படத்துக்கு, ராஜா தி ஜர்னி என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ்
சென்னையில் நடந்த விழா ஒன்றில் இதை தெரிவித்த அவரிடம், இதில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்று யுவன் சங்கர்ராஜா தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு
இதனால் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











