ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இசை ட்ரீட் கொடுத்து அசத்திய யுவன்.. ரஹ்மான் உட்பட பலர் வாழ்த்து!
சென்னை: யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியர்களுக்காக உருவாக்கியிருக்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தை நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாமிய பெருமக்கள் மசூதிகளில் கூடாமல் வீடுகளிலேயே தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, நபிகளின் பெருமைகளை கூறும் வகையில் பாடல் ஒன்றை இசையமைத்து உருவாக்கி இருக்கிறார். யா ரசூலே.. யா ஹபீபே.. எனத் தொடங்குகிறது அப்பாடல்.

அள்ளும் லைக்ஸ்
இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ரிஸ்வான் பாடியிருக்கின்றனர். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஆர்யா, ரஹ்மான்
யுவன் சங்கர் ராஜாவின் இந்த இஸ்லாமிய பாடலை கேட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். நடிகர் ஆர்யா பாடல் சூப்பர் என சைகை செய்திருக்கிறார். இதேபோல் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், பதிவிட்டுள்ள தனது டிவிட்டில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய "யா நபி" (Sal) புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள். பாடலை இயற்றி உடன் பாடியிருப்பவர் ரிஸ்வான் என பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் சுரக்கும் இப்பாடல்
இதேபோல் இயக்குநர் சீனு ராமசாமியும் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பாடலை கேட்டு பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அண்ணல் முகம்மது நபி(சல்) அவர்களை வாழ்த்தி இசைத்து இறைஞ்சி அழைக்கிறது மனதில் கருணை ஒளிரும்
கண்ணீர் சுரக்கும் இப்பாடல்.. என பதிவிட்டுள்ளார்.

யுவன் நன்றி
இதேபோல் நடிகர் கிருஷ்ணா, காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி, இயக்குநர் ராதா உள்ளிட்ட பலரும் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பாடலை பாராட்டியுள்ளனர். தன்னுடைய பாடலை பாராட்டியவர்களின் பாடலை ரீடிவிட் செய்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications