யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த சூப்பர் அங்கீகாரம்.. தீயாய் பரவும் புகைப்படம்!
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்துள்ள சூப்பரான அங்கீகாரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் மெக்காவுக்கு உம்ரா யாத்திரையை மேற்கொண்டார்.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது இந்த புதிய புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

துபாய் டூர்
இஸ்லாமிய மதத்துக்கு மாறிய நிலையில், அடிக்கடி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். பல வெளிநாடுகளிலும் யுவன் 25 எனும் இசை கச்சேரி நிகழ்ச்சிகளையும் அவர் சமீபத்தில் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

உம்ரா யாத்திரை
சமீபத்தில் மெக்காவுக்கு யுவன் சங்கர் ராஜா உம்ரா யாத்திரை மேற்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. இஸ்லாமிய மார்க்கத்துக்கு தன்னை மாற்றிக் கொண்ட யுவன் சங்கர் ராஜா மெக்காவுக்கு பயணம் மெற்கொண்டு இருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த ஆன்மிக பயணத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.

கோல்டன் விசா
இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாக்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா கொடுத்து கெளரவித்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

10 ஆண்டுகால குடியுரிமை
மோகன்லால், மம்மூட்டி, த்ரிஷா, பார்த்திபன், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களுக்கு இந்த கோல்டன் விசா சமீப காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமைக்கான விசா தான் இந்த கோல்டன் விசா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்டான லவ் டுடே
இந்த ஆண்டு வலிமை, மாமனிதன், விருமன், குருதி ஆட்டம், நானே வருவேன் மற்றும் லவ் டுடே உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. யுவனின் இளமை துள்ளலான பாடல்களும் படத்திற்கு தேவையான பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காபி வித் காதல் படத்திற்கும் யுவன் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











