இன்ஸ்டாவில் கலக்கி வரும் யுவன் சங்கர் ராஜா !

சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், சிவாங்கி, புகழ் மற்றும் பிக் பாஸ் ஷிவானி ஆகியோர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலையும், யுவனின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தனது 16வது வயதிலேயே தனது இசைப்பயணத்தை தொடங்கினார். அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்னர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இசையமைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் யுவன்.

ரீ மிக்ஸில் புது யுக்தி

ரீ மிக்ஸில் புது யுக்தி

பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைக்கொண்ட யுவன். மேற்கத்திய இசையை பயன்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார் . தமிழ் நாட்டில் ரீ மிக்ஸில் புது யுக்தியை புகுத்தி அதிலும் வெற்றி கண்டு வருகிறார். 125 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.

ஏராளமான பாலோவர்ஸ்

ஏராளமான பாலோவர்ஸ்

இணையத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் யுவன், இதனால் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 942K வாக உள்ளது. குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், சிவாங்கி, புகழ் மற்றும் பிக் பாஸ் ஷிவானி ஆகியோர் அவரை பின் தொடர்கின்றனர். தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலையும், யுவனின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இணையத்தில் ஹிட்

இணையத்தில் ஹிட்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் முதல் பாடலான 'மெஹரசைலா' பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங்கானது. அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X