Exclusive இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. பிரமாண்ட மேடையை அலங்கரிக்கும் யுவன் சங்கர் ராஜா!
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிழச்சியின் தூதுவராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு தூதுவராக பங்கேற்க உள்ளார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மியூசிக் ரியாலிட்டி ஷோ சரிகமப. இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சரிகமப நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பாடகி சுஜாதா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சரிகமப சீனியர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.

தொகுப்பாளினி அர்ச்சனா
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜி தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா,
"சரிகமப நிகழ்ச்சி நிறைய பாடகர்களை உருவாக்கியுள்ளது. ராக்ஸ்டார் ரமணியம்மா, ஸ்ரீநிதி, விஷ்ணு பிரசாத், மாஸ்டர் கமலேஷ் என நிறைய பேர் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளனர்.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 2
சரிகமப சீனியர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதிலும் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் சுஜாதா இருப்பர். அவர்களுடன் 100 பேர் கொண்ட ஜூரி டீம் ஒன்றும் இருக்கும்.

யுவன் சங்கர் ராஜா
இவை அனைத்துக்கும் மேலாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியின் தூதராக அவர் செயல்படுவார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யுவன் பங்கேற்பது இதுவே முதல்முறை.

வெளிநாட்டு போட்டியாளர்கள்
சரிகமப சீனியர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறைவெளிநாடுகளில் இருந்து நிறைய போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். எனவே பல மொழி போட்டியாளர்கள் இதில் இடம்பெறுவர்", என அர்ச்சனா கூறினார்.


Click it and Unblock the Notifications











