யுவன் சங்கர் ராஜாவின் "யு1 ரெக்கார்ட்ஸ்".. புதிய வெப்சைட் !
சென்னை : இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இப்போது வலிமை, மாநாடு போன்ற படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரில் பிஜிஎம் தெறிக்க விட்டிருந்தார்.\
இந்தநிலையில் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதிதாக யுவன் ரெக்கார்ட்ஸ் என்ற இணையதளத்தை இன்று மதியம் அறிமுகப்படுத்த உள்ளார்.

ரவுடி பேபி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு மயங்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு தலை முறைக்கு ஏற்றவாறு மெலோடி பாடல்களையும் ட்ரெண்டிங் பாடல்களையும் வழங்குவதில் இவர் கில்லாடி. அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பார்வையாளர்களை பெற்று யூட்யூபில் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

புது விதமான எனர்ஜியை
அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக முதல்முறையாக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அதைத்தொடர்ந்து இசையமைத்த அனைத்து பாடல்களும் இளமை துள்ளலுடன் புது விதமான எனர்ஜியை ரசிகர்களுக்கு கொடுக்க இவரது இசைக்கு மயங்கிய ரசிகர்கள் இப்பொழுது உலகமெங்கிலும் கோடிக்கணக்கில் உள்ளனர். தெலுங்கு உள்ளிட்ட இதர மொழியிலும் பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார்.

பிஜிஎம் தெறி
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மாநாடு மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ள நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. அதில் பின்னணி இசை மற்றும் பிஜிஎம் மிக அற்புதமாக யுவன்சங்கர்ராஜா கொடுத்திருந்தார். இதேபோல வலிமை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தரமான சம்பவம் ஒன்றே செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இப்பொழுது சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று மதியம் 2 மணிக்கு
அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் "யு1 ரெக்கார்ட்ஸ்" என்ற பெயரில் லான்ச் ஆகிறது. இந்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ள யுவன்சங்கர் ராஜாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வர இன்று மதியம் 2 மணிக்கு ஷார்ப்பா லான்ச் ஆகிறது யுவன் ரெக்கார்ட்ஸ் இணையதளம்.


Click it and Unblock the Notifications











