அஜித் போட்ட கண்டிசன்.. வருத்தப்பட்ட யுவன்.. வலிமை படத்தில் இருந்து வெளியேறுகிறாரா?- உண்மை என்ன?
அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் வலிமை படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியேற இருப்பதாக செய்திகள் வருகிறது.
சென்னை: அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் வலிமை படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியேற இருப்பதாக செய்திகள் வருகிறது.
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பிங்க் படத்தின் ரிமோக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.
இதனால் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

அடுத்த படம்
இதையடுத்து அஜித் மீண்டும் எச் . வினோத் உடன் சேர்ந்து புதிய படம் எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.

போலீஸ் ரோல்
இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. போலீஸ் கெட்டப் என்பதால் அவர் உடலை குறைத்து வருகிறார். இதில் அவர் சிக்ஸ் பேக் வைக்க முயன்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன சிக்கல்
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தேர்வாகி உள்ளார். ஆனால் இவர் கொடுத்த பாடல் டியூன் ஒன்று படக்குழுவிற்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்திலும் யுவன் மியூசிக் பெரிதாக எடுபடவில்லை.

ஏன் இப்படி
கடைசியாக அஜித் படத்தில் ஹிட் ஆன பாடல்கள் என்றால் விசுவாசம் பாடல்கள்தான். அதிலும் கண்ணான கண்ணே பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு இமான் இசை அமைத்து இருந்தார்.

கேள்வி கேட்டார்
இதனால் அஜித் அதேபோல் பாடல் இருக்க வேண்டும் என்று படக்குழுவிடம் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். இந்த பாடலும் விசுவாசம் பெரிய ஹிட் அடிக்க முக்கிய காரணம். 2019ன் டாப் வசூலாக விசுவாசம் உருவெடுக்க இதுவும் காரணம் என்று அஜித் கூறி இருக்கிறார்.

கோபம்
இதை படக்குழு யுவனிடம் தெரிவித்துள்ளதாம். இதனால் கோபம் அடைந்த யுவன், படத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள். இதனால் படத்தில் இமான் இணைய வாய்ப்புள்ளது என்றனர்.

பொய்
ஆனால் இது உண்மை இல்லை, யுவன் கண்டிப்பாக நல்ல பாடல்களை இந்த படத்திற்கு கொடுப்பார். படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடிக்கும் என்று அவரின் ரசிகர்கள் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











