மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன் சங்கர் ராஜா.. தீயாக பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மெக்காவுக்கு உம்ரா யாத்திரை மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

முன்னணி இசையமைப்பாளரானயுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக மதம் மாறி ஜஃப்ரூன் நிசா என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

3 திருமணங்கள்

3 திருமணங்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கடந்த 2005ம் ஆண்டு சுஜயா சந்திரன் எனும் தனது தோழியை திருமணம் செய்து கொண்டார். 2008ல் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர், 2011ம் ஆண்டு திருப்பதியில் ஷில்பா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த உறவும் அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை 2014ம் ஆண்டு ஷில்பாவையும் பிரிந்தார். பின்னர் 2015ல் ஜஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஸியா யுவன் எனும் ஒரு மகள் உள்ளார்.

இஸ்லாம் மதத்தில்

இஸ்லாம் மதத்தில்

கடந்த 2014ம் ஆண்டு தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேன் என அதிரடியாக யுவன் சங்கர் ராஜா அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளையராஜா இன்னமும் இந்து மதத்தின் மீது அளவில்லா பற்றுக் கொண்டுள்ள நிலையில், யுவன் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது குடும்பத்திலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அப்துல் ஹாலிக் என்றும் தனது பெயரை யுவன் மாற்றிக் கொண்டாலும், சினிமாவுக்காக இன்னமும் யுவன் சங்கர் ராஜா எனும் பெயரையே பயன்படுத்தி வருகிறார்.

மெக்கா பயணம்

மெக்கா பயணம்

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்காவிற்கு சென்றுள்ள யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. மெக்காவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதனை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ஹஜ் யாத்திரை இல்லை

ஹஜ் யாத்திரை இல்லை

மெக்காவுக்கு யுவன் சென்றது ஹஜ் யாத்திரை இல்லை என்றும் இதன் பெயர் உம்ரா என அழைக்கப்படும் என்றும் கூறுகின்றனர். ஹஜ் பண்டிகை நேரத்தில் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வார்கள். (இருமுடிகட்டி ஐயப்பன் விரதம் இருந்து போவது போல்) இதற்காக அரசின் ஹஜ் கமிட்டியில் பதிவு செய்து அதன் மூலம் மட்டுமே செல்ல முடியும். இப்படி சென்று வருபவர்கள் ஹாஜிக்கள் என பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்கள். இது ஐந்து கடமைகளில் ஒன்று.

உம்ரா யாத்திரை

உம்ரா யாத்திரை

இதுவல்லாமல் தனியாக விரதம் இருந்து மெக்கா, மதினாவுக்கு சென்று பார்த்து தொழுகை நடத்தி வருவார்கள்;. இது ஹஜ் புனித கடமையாக கருதப்படாது. இதை உம்ரா என்பார்கள். யுவன் தற்போது இந்த முறையில் மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்றுள்ளார். அதற்கான புகைப்படமே தற்போது வெளியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X