AK X Yuvan: அஜித்தோடு மீட்டிங்கைப் போட்ட யுவன்.. பேசிய டாபிக் தான் அல்டிமேட்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால், பலரும் சொல்வது யுவன் சங்கர் ராஜாவைத்தான் இருக்கும். தீனா படத்தில் இருந்து தொடங்கிய இவர்களின் காம்பினேஷன் படத்திற்கு படம் தரம். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் கூட்டணியில் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் அவர்கள் கூட்டணிக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருக்கும்போது, அஜித் குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா சந்தித்து பேசியுள்ளனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு தீனா படத்தில் இணைந்த இந்த கூட்டணி அதன் பின்னர் எப்போது இணைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உருவாகிவிடுகிறது. அஜித்தின் பில்லா, பில்லா 2 போன்ற படங்களில் யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, பாடல்கள் படத்தின் தீம் மியூசிக் என அனைத்துமே மிரட்டி விட்டது. ஆரம்பம் படத்தில் இருந்த அட்டகாசமான காட்சிகளை திரையில் மாஸாக மாற்றியது யுவனின் இசை தான். அதேபோல் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை மேலும் ஒரு படி உயர்த்தியது யுவனின் இசை.
கடைசியாக இவர்கள் இணைந்த படம் வலிமை. அதன் பின்னர் இந்த கூட்டணியில் படங்கள் அமையவில்லை. ரசிகர்களும் ஆவலுடன் இவர்களின் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், மற்ற நடிகர்களுக்கு யுவன் சங்கர் ராஜா தனது முழு முயற்சியில் தரமான இசையைக் கொடுத்தாலும், அஜித்திற்கு இசையமைக்கும் போது மட்டும் அது இன்னும் ஸ்பெஷலாக இன்னும் தி பெஸ்ட்டாக மாறிவிடுகிறது.

AK - U1 - VV: அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகப் போவதாக ஏற்கனவே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் பில்லா மற்றும் ஆரம்பம் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு படத்திற்கும் இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. இப்படியான நிலையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் அஜித் குமார் சந்தித்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் கேள்வி: இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர். காரணம், ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜாவும் அஜித்தை சந்தித்துள்ளதால், இவர்கள் கூட்டணியில் படம் உருவாகிறதோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தரமான கேப்ஷன்: யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு கேப்ஷனாக, " இது அஜித்துடனான மிகச்சிறந்த சந்திப்பு. இந்த சந்திப்பில் நாங்கள் இருவரும் கார்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பிரேம்ஜி, யுகேந்திரன், ரியோ ராஜ் உள்ளிட்ட பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள். யுவனின் இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











