என்னது...வலிமை படத்தில் யுவனின் இசை இல்லையா ?

சென்னை : அஜித்தின் வலிமை படத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் இசை இடம்பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வலிமை டிரைலர் 22 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து யூட்யூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஹிட்டான பாடல்கள்

ஹிட்டான பாடல்கள்

வலிமை படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த நாங்க வேற மாரி, அம்மா பாடல் ஆகியன முறையே ஃபஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டன. டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதிய இந்த இரு பாடல்களுமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததுடன் வேற மாரி ஹிட் அடித்தன.

யுவன் இசை கிடையாதா

யுவன் இசை கிடையாதா

இந்நிலையில் வலிமை படத்தின் ஒட்டுமொத்த இசை ஆல்பம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாங்க வேற மாரி, அம்மா பாடல், விசில் தீம் ஆகியன இடம்பெற்றிருந்தன. அதோடு வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கவில்லை என்ற தகவலும் வெளியிடப்பட்டது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம், மங்காத்தா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தான் பாடல் இசையுடன், பின்னணி இசையும் அமைத்திருந்தார். மாஸ் ஹீரோக்களுக்கு சிறப்பான தீம் மியூசிக் அமைப்பதில் கைதேர்ந்தவர் யுவன். அவரின் பின்னணி இசைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் வலிமை படத்திற்கு அவர் பின்னணி இசை அமைக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இவர் தான் இசையமைத்தாரா

இவர் தான் இசையமைத்தாரா

வலிமை படத்தின் பாடல்களுக்கு மட்டும் தான் யுவன் இசை அமைத்துள்ளாராம். பின்னணி இசை அமைத்தது ஜிப்ரான் தான். ஜிப்ரான் இதற்கு முன் டைரக்டர் ஹச்.வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் பணியாற்றி உள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஜிப்ரானும் ஒருவர் என்றாலும், வலிமையில் யுவனின் பின்னணி இசையை மிஸ் செய்வதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X