இவனுங்க தொல்லை தாங்கல.. கோட் 3வது சிங்கிள் பரிதாபங்கள்.. யுவன் சங்கர் ராஜா போட்ட போஸ்ட்!
சென்னை: கோட் படத்தின் 3வது சிங்கிளையாவது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கொடுங்க யுவன் என அவரது ஸ்டூடியோவிலேயே தவமாய் தவம் கிடக்க ஆரம்பித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு என யுவன் சங்கர் ராஜா சற்றுமுன் வெளியிட்ட போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு என வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் வெயிட்டான படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.
2 பாடல்கள்: புதிய கீதை படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோட் படத்தின் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில், அடுத்த பாடல் வெறித்தனமாக இருக்க வேண்டும் என வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு யுவன் சங்கர் ராஜா உண்மையாகவே தரமான சம்பவம் செய்யப் போவதாக கூறுகின்றனர்.
3வது சிங்கிள்: வெங்கட் பிரபு விரைவில் 3வது சிங்கிள் என ட்வீட் போட்டதில் இருந்தே யுவன் சங்கர் ராஜா ஸ்டூடியோவில் தான் தவமாய் தவம் கிடந்து வருகிறார் போல தெரிகிறது. ஸ்டூடியோவில் ஒரு மூளையில் வெங்கட் பிரபு இருக்கும் போட்டோவை வெளியிட்டு தற்போது யுவன் சங்கர் ராஜா கலாய்த்துள்ளார்.
இவிங்க தொல்லை தாங்கல: நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் பாடல்கள் வெளியாவதற்கு முன்னதாக வரும் புரமோ வீடியோக்கள் ஹிட் அடித்த நிலையில், பலரும் அதே பாணியை ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், வீடியோ வெளியிடாமல் அந்த ஸ்டைலில் போட்டோ ஒன்றை வெளியிட்டு 'இவிங்க தொல்லை தாங்கல' என யுவன் சங்கர் ராஜா போஸ்ட் போட்டுள்ளார்.
வொர்த்தா இருக்கணும்: கொடுக்கிற பில்டப்புக்கு எல்லாம் கோட் படத்தின் 3வது சிங்கிள் வொர்த்தா இருக்கணும் என யுவன் சங்கர் ராஜா போஸ்ட்டுக்கு கீழ் விஜய் ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். கங்கை அமரன் வரிகளில் ஸ்ருதிஹாசன் இந்த பாடலை பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது. 3வது சிங்கிள் ரிலீஸ் ஆன பிறகு அடுத்து ஆடியோ லாஞ்ச் தான்.


Click it and Unblock the Notifications











