தமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா

சென்னை : தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை, சிம்பு நடித்துள்ள மாநாடு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

படங்களுக்கு இசை அமைப்பதுடன் பல ஆண்டுகளாக தனிப்பாடல்களை இசைத்து, தயாரித்து வருகிறார். இவர் வெளியிடும் இசை ஆல்பங்களும் இசை பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை. அதனால் யுவனின் இசைக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.

Yuvan shankar raja released a special cheer up song for Tamilnadu Olympic players

தற்போது, தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார் யுவன். தனது ட்விட்டர் பக்கத்தில், "வென்று வா வீரர்களே" என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் இந்த பாடலை யுவன் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்திய அரசின் சார்பில் ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த, Hindustani way என்ற பாடலை வெளியிட்டார். தமிழக வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலும் வீடியோ சாட் மூலம் அவர்களை சந்தித்து பேசினார். அவர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்தும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X