அப்பா இளையராஜாவின் 1417வது படம்.. நினைவெல்லாம் நீயடா ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

சென்னை: நடிகர் பிரஜன் மற்றும் மனிஷா யாதவ் நடிக்கும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்டார்.

Recommended Video

Singer Pop Shalini Exclusive | Ilayaraja பாட்டுதான் தமிழில் நான் கேட்ட முதல் பாடல் | Filmibeat Tamil

இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் .

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

நினைவெல்லாம் நீயடா

நினைவெல்லாம் நீயடா

சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜன் நடிப்பில் உருவாகி வரும் படம் நினைவெல்லாம் நீயடா. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குநர் ஆதிராஜன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரஜனுக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார்.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களை கவர்ந்த நடிகை மனிஷா யாதவ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி உட்பட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நடித்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லவ்

ஃபர்ஸ்ட் லவ்

முதல் காதலை கொண்டாடிய அழகி, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல், 96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது "நினைவெல்லாம் நீயடா". கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசையமைத்தது போலவே இந்த படத்திற்கும் இளையராஜா காதல் ரசம் வழியும் பாடல்களை இசையமைத்துள்ளார்.

70 சதவீதம் நிறைவு

70 சதவீதம் நிறைவு

பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளி ஓவியம் தீட்டுகிறார். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்க, கலையை முனி கிருஷ்ணா கையாளுகிறார் ஸ்டண்ட் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். நடனக் காட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர். இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

யுவன் வெளியீடு

யுவன் வெளியீடு

இந்த படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் குறிப்பிடும்போது, "இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்திய , இளைஞர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளர், 'யங் மேஸ்ட்ரோ' யுவன்ஷங்கர் ராஜாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

இளையராஜாவின் 1417வது படம்

இளையராஜாவின் 1417வது படம்

மண்ணுக்குள் போகும் வரை மனசுக்குள் நிறைந்திருக்கும் முதல் காதல். அதுவும் பள்ளி நாட்களில் பக்குவம் இல்லாத வயதில் பொசுக்கென்று பூத்துவிடும் அந்தக் காதல் வயசானாலும் வாடிப்போகாமல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட காதலை கொண்டாடும் இளமை துள்ளும் படமாக உருவாகி வருகிறது நினைவெல்லாம் நீயடா. படம் பார்ப்பவர்கள் எல்லோரையும் மீண்டும் பள்ளிக்கூடம் போக மாட்டோமா என்று ஏங்க வைக்கும். இசைஞானியின் ஐந்து பாடல்களும் மனதை மயக்கும் ரகம் என இயக்குநர் புகழ்ந்துள்ளார்.

மே மாத ரிலீஸ்

மே மாத ரிலீஸ்

பிரஜன், மனிஷா, சினாமிகா மட்டுமல்லாமல் இளம் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவா ஜோடிக்கும் இந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கித் தரும். இந்த படத்தை மே மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றும் இயக்குநர் ஆதிராஜன் குறிப்பிட்டுள்ளார்.

பாவனி செம ஹேப்பி

பாவனி செம ஹேப்பி

சின்னத்தம்பி சீரியலில் பிரஜன் உடன் நடித்த பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நினைவெல்லாம் நீயடா ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தனது நண்பருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் டிவி பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் பிரஜன் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X