கோலிவுட்டில் நெப்போடிஸம்னு சொன்னது சரிதான்..ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கருக்கு சான்ஸ்!
சென்னை : கோலிவுட்டில் நெப்போடிசம் தலைக்காட்டி உள்ளது என்று பரவிவரும் செய்தி உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விருமன் படத்திற்காக பாடகி ராஜலட்சுமி பாடிய பாடலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாடவைத்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

விருமன்
தேவராட்டம், மருது, கொம்பன், புலிகுத்தி பாண்டி, உள்ளிட்ட படங்களை கொடுத்த இயக்குநர் முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை வைத்து என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், சூரி, வடிவுக்கரசி,சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை ரிலீஸ்
இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர் டிரைலரை வெளியிட்டார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

மதுரவீரன் பாடலின் பின்னணி
விருமன் படத்தில் அதிதி ஷங்கர், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பாடலை பாடியதன் மூலம், அதிதி நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் மாறியுள்ளார். அதிதியின் பாடலை கேட்டு பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில், இப்பாடலுக்கு பின்னணியில் நடந்த விஷயம் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ராஜலட்சுமியின் குரல் நீக்கம்
இந்நிலையில், கிராமிய இசையோடு இருக்கும் மதுரவீரன் பாடலை முதலில் ராஜலட்சுமிதான் பாடி உள்ளார். ஆனால், நட்சத்திர அந்தஸ்துக்காகவும், முதல் படத்திலேயே பாடகியாக அதிதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்து வெளியிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் பாடகி ராஜலட்சுமி கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

தலைதூக்கும் நெப்போடிசம்
தமிழ் சினிமாவில் நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஷயம் தலைதூக்குகிறதா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. நடிகை ஆத்மிகா கூட சமீபத்தில் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில், ஷங்கர் மகளை பாடகியாக அறிமுகப்படுத்துவதற்காக பிரபல பாடகி பாடிய பாடலையே படத்தில் இருந்து நீக்கியது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











