உங்க லவ்.. அது இல்லைன்னா.. நான் இல்லை.. யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி ட்வீட்!

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்றுடன் 23 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

Recommended Video

Cobra First Look Breakdown | Vikram | 23 Years of Yuvanism

காலை முதலே ட்விட்டர் டிரெண்டிங்கில், #23YearsofYuvanism டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களின் லவ் இல்லையென்றால், நான் இல்லை என யுவன் சங்கர் ராஜா ஒரு நெகிழ்ச்சி ட்வீட் போட்டுள்ளார்.

உங்க லவ்

சினிமாவில் 23 வருடங்களாக இசையமைத்து வருகிறேன், உங்க லவ் இல்லைன்னா இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது. தொடர்ந்து, எல்லையற்ற அன்பை ரசிகர்கள் என் மீது செலுத்தி வருகின்றனர். உங்கள் அன்பு தான் என்னை மேலும், உழைக்க ஊக்குவிக்கிறது. என் இதயம் முழுவதும் ரசிகர்களாகிய உங்கள் அன்பு தான் நிறைந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

சித் ஸ்ரீராம் கமெண்ட்

இப்போ வர படங்களில் எல்லாம், ஒரு பாட்டு கண்டிப்பா பெரிய ஹிட்டாகுது என்றால், அந்த பாடலை சித் ஸ்ரீராம் தான் பாடியிருப்பார் என்றே ரசிகர்கள் எண்ணத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு தனது இனிய குரலால், இளைஞர்களை வசீகரித்துள்ள சித் ஸ்ரீராம், யுவனின் இந்த ட்வீட்டுக்கு கீழே இன்ஸ்பயரிங் ப்ரோ என கமெண்ட் செய்துள்ளார்.

செம மீம்

23 வருட யுவனிஸத்தை கொண்டாடும் வகையில், செம மீம் ஒன்று வைரலாகி வருகிறது. கைதி படத்தில், கார்த்தி பிரியாணி சாப்பிடும், டெம்பிளேட்களை வைத்துக் கொண்டு, சோகமான, நேரங்களில், ஹெட் செட் போட்டுக் கொண்டு, யுவன் சங்கர் ராஜா பாடல்களை கேட்டால் போதும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எப்பவும் ராஜா

70ஸ், 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இளையராஜா என்றால், 90ஸ், 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் யுவன் சங்கர் ராஜா தான். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், சென்னை 28, மங்காத்தா என ஒவ்வொரு ஸ்டேஜிலும், இளைஞர்களை ஈர்த்து வருகிறது யுவனின் மாய இசை.

லைஃப் டைம் செட்டில்மென்ட்

இத விட பெட்டரா கடந்த ஐந்து வருடங்களில் ஒரு மூவி ஆல்பம் காமிக்கறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் என பியார் பிரேமா காதல் படத்தின் ஆல்பத்தை காட்டி யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள், சவால் விட்டு வருகின்றனர். பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான இந்த படத்தை தயாரித்து, இசையமைத்திருந்தார் யுவன்.

ரியோ ராஜ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், அடுத்ததாக பத்ரி இயக்கத்தில் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். 23 வருட யுவனிஸத்தில், தனது படமும் இடம்பெறுவது பெருமை என ரியோ ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X