விஜய் மகன் சஞ்சய் இப்படிபட்டவரா... யுவன் சங்கர் ராஜா மேடையில் சொன்ன ரகசியம் !

சென்னை : சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்துக்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து இருந்தார் யுவன் சங்கர் ராஜா.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்தார். அதன்பிறகு ஏலிஸ் மற்றும் மாமனிதன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் யுவன்சங்கர் ராஜா இப்போது விஜய் மகன் சஞ்சய் குறித்து ரகசியம் ஒன்றை மேடையில் பகிர்ந்துள்ளார்

பிஜிஎம் கிங்

பிஜிஎம் கிங்

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் நாடி துடிப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் இசை அமைப்பதில் கிங். குறிப்பாக இவருக்கு பிஜிஎம் கிங் என்றே தனி பெயரே உள்ளது. அந்த அளவிற்கு இவர் இசையமைக்கும் படங்களில் பிஜிஎம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என அனைவரது படங்களுக்கும் இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற வலிமை படத்திற்கு இசையமைத்திருந்தார். ஹாலிவுட்டுக்கு இணையான ஸ்டண்ட் காட்சிகள் ஹெச் வினோத்தின் பிரமிக்க வைக்கும் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பாடல்கள் மட்டும் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளராக

தயாரிப்பாளராக

இதுவரை இசையமைப்பாளராக மட்டும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் ஆனார். அதையடுத்து இப்போது ஏலிஸ் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களை யுவன் சங்கர் ராஜா தற்போது தயாரித்து வருகிறார்.

விஜய்யின் மகன்

விஜய்யின் மகன்

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மாமனிதன்,குருதி ஆட்டம் ,நானே வருவேன்,எரியும் கண்ணாடி, எஜெண்ட் கண்ணாயிரம், விருமன்,ஆண்டவர்,இறைவன் மிகப் பெரியவன் என பல படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது நடிகர் விஜய் மகன் சஞ்சய் குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய்யின் நண்பர் ஜெகதீஷ் என்பவர் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு சஞ்சய்யின் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வெறித்தனமான ரசிகர்

வெறித்தனமான ரசிகர்

அந்த புகைப்படத்தில் சஞ்சய் "யுவனிஷம்" என எழுதப்பட்டிருக்கும் டி ஷர்ட்டை அணிந்து கொண்டுள்ளார். மேலும் சஞ்சய் யுவனின் வெறித்தனமான ரசிகர் என்பதையும் அப்போது கூறியுள்ளார். குறிப்பாக அந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தான் யுவன் சங்கர் ராஜாவுக்கு அனுப்பச் சொன்னார் என்பதையும் அந்த மேடையில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் யுவன் சங்கர் ராஜாவின் வெறித்தனமான ரசிகர் என பலரும் அறிந்திராத இந்த செய்தி இப்பொழுது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X