காமன்வெல்த் அரங்கில் கெத்துக்காட்டிய ’அவன் இவன்’ பாடல்.. செம உற்சாகத்தில் யுவன் ரசிகர்கள்!

சென்னை: பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று குவித்து வருகிறது.

Recommended Video

காமன்வெல்த் அரங்கில் கெத்துக்காட்டிய ’அவன் இவன்’ பாடல்.. செம உற்சாகத்தில் யுவன் ரசிகர்கள்!

அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் 'அவன் இவன்' படத்தில் இடம்பெற்ற "ஆத்தே டியா டியா டோலே" பாடலுக்கு பெண்கள் சிலர் நடனமாடினர்.

காமன்வெல்த் அரங்கில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் களைகட்டிய நிலையில், ரசிகர்கள் அந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இளையராஜாவின் மகன்

இளையராஜாவின் மகன்

மேஸ்ட்ரோ என ஒட்டுமொத்த இசை உலகமே கொண்டடி வரும் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் அப்பாவை போல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பிஜிஎம் கிங் என தனியாகவே ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு சிம்புவின் மாநாடு படத்தில் மாஸ் காட்டி இருந்தார் யுவன்.

அதிதி ஷங்கர் சர்ச்சை

அதிதி ஷங்கர் சர்ச்சை

யுவன் சங்கர் ராஜா இசையில் விரைவில் விருமன் படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், சின்ன மச்சான், புஷ்பா படத்தின் என் சாமி பாடல்களை பாடிய ராஜலட்சுமிக்கு பதிலாக, அதிதி ஷங்கரை யுவன் சங்கர் ராஜா பாட வைத்துள்ளார் என்றும் விருமன் படத்தின் பிஜிஎம் சரியில்லை என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

காமன் வெல்த்தில் யுவன் பாடல்

காமன் வெல்த்தில் யுவன் பாடல்

எந்த சர்ச்சை பற்றியும் கருத்து தெரிவிக்காமல் தனது இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில், அவர் இசையில் உருவான ‘அவன் இவன்' பாடலுக்கு மூன்று பெண்கள் நடனமாடிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. மித்து ஜானு எனும் டான்ஸர் தொடர்ந்து தனது குழுவினருடன் ஏகப்பட்ட தமிழ் பாடல்களுக்கு நடனமாடி உள்ள வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஷேர் செய்யும் ரசிகர்கள்

ஷேர் செய்யும் ரசிகர்கள்

யுவன் சங்கர் ராஜாவின் பாடல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அரங்கில் ஒலித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக உள்ள விருமன் நிச்சயம் அவரது சிறந்த இசையை ரசிகர்களுக்கு புரிய வைக்கும் என அதிகளவில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X