”நெனச்சதொன்னு நடந்ததொன்னு” மாமனிதன் இரண்டாவது பாடல் ரிலீஸ்.. யுவன் இன்னாம்மா ஃபீல் பண்ணியிருக்காரு!
சென்னை: இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள மாமனிதன் செகண்ட் சிங்கிள் 'ஏ ராசா' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் சிங்கிளான தட்டிப்புட்டா பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பாடலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

சீனுராமசாமி இயக்கத்தில்
கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. 2010ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியை நாயகனாக மாற்றி அழகுப் பார்த்தார். தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல் படம் இன்னமும் வெளியாகவில்லை. 2016ல் வெளியான தர்மதுரை படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், மீண்டும் மாமனிதன் படத்திற்காக விஜய்சேதுபதியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

ரிலீசுக்கு காத்திருப்பு
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் கடந்த ஓராண்டாகவே ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. தர்மதுரை படத்தை போலவே மாமனிதன் படமும் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக மாமனிதன் படத்திற்கு இசையமைத்துள்ளனர். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா. விஜய் வரிகளில் அந்த பாடல் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ ராசா யுவன்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு மாமனிதன் படத்தின் இரண்டாவது பாடலான ஏ ராசா பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை பாடியுள்ள யுவன் சங்கர் ராஜாவின் ஆல்பம் வீடியோவும் வெளியாகி யுவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
நெனச்சதொன்னு.. நடந்ததொன்னு
நெனச்சதொன்னு.. நெனச்சதொன்னு.. நடந்ததொன்னு என தொடங்கும் அற்புதமான வரிகளும் இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் யுவனின் மாயக் குரல் என அனைத்தும் இந்த பாடலை ரசிகர்களை முதல் முறையிலேயே அப்படியே மெய் மறக்க செய்யும் விதமாக உள்ளது. நிச்சயம் பலரது காலர் ட்யூன்களாக இந்த பாடல் இந்நேரம் மாறியிருக்கும்.


Click it and Unblock the Notifications











