மகளின் கைபிடித்து… ஆனந்த யாழை மீட்டும் யுவன் சங்கர் ராஜா !
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் கை கோர்த்து நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை பயன்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோ யுவனின் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர்
பாடகர், இசையமைப்பாளர், பாடலாசியர் என பல திறமைகளைக் கொண்டவர் யுவன் சங்கர் ராஜா. துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான யுவன், அப்பாவிற்கு தப்பாத பிள்ளை என்பதை இனிமையான பல பாடல்களுக்கு இசையமைத்து நிரூபித்து விட்டார்.

திருமணம்
2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஆடை வடைவமைப்பாளராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
மகளுடன் கைகோர்த்து
இந்நிலையில், யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் கைகோர்த்து கொண்டு செல்லும் அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை அந்த வீடியோவில் பயன்படுத்தி உள்ளார். இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அப்பா மகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை அளவிட முடியாது என்பதை உணர்த்தும் விதமாக தங்கமீன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், நா முத்துகுமாரின் பாடல் வரிகளில் ஸ்ரீராமின் கம்பீரமான குரலில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் வெளியாகி வெற்றி பெற்ற பாடலானது. மகளை பெற்ற ஒவ்வொரு அப்பாவும் இந்த பாடலை லாபித்து லாபித்து கேட்பார்கள்.

வேகமா வளருகிறாள்
இதேபோல தனது மகளை கையில் தூக்கிவைத்துக்கொண்டு இருக்கும் கருப்பு வெள்ளைபுகைப்படத்தை வெளியிட்டு எனது மகள் வேகமாக வளருகிறாள் என்று பதிவிட்டு இருந்தார் . இந்த புகைப்படமும் பல லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











