Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் கருப்பு திராவிடன்.. ஏன் இப்படி திடீர் பதிவு .. ட்ரெண்டாகும் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
Recommended Video
இந்தி திணிப்பு விவகாரம் ஒருபக்கம், மோடி அம்பேத்கர் விவகாரம் ஒரு பக்கம் என சோஷியல் மீடியாவுக்கு சரியான தீணி கிடைத்துள்ளது.
பட்டிமன்றம் வைத்து பேசினாலும், தீராத பெரும் பிரச்சனையாக இவ்விவகாரம் ஒரு புயலை கிளப்பி வருகிறது.
நான்
மாடலாக
போறேன்னு
சொன்னதும்..
என்னோட
நண்பர்களே
கேலி
செய்தார்கள்!

இளையராஜா
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா பேசி இருந்தார். இளையராஜாவின் இந்தக் கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

மன்னிப்பு கேட்க முடியாது
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

நான் கருப்பு திராவிடன்
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் கருப்பு ஆடைகளை அணிந்து, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அதிக அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. மோடியை தந்தை இளையராஜா ஆதரித்துள்ள நிலையில், மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட கொள்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏ ஆர் ரகுமானின் பதிவு
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ள சூழலில், ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ்த்தாய் தமிழின் அடையாளமான ழ கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டு இருந்தார். முன்னணி இசையமைப்பாளரின் ஒவ்வொரு கருத்தும் மிகவும் உற்றுநோக்கப்பட்டு ரசிகர்களால் அது வைரலாக்கப்பட்டு வருகிறது.