சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு யுவனின் இசை விருந்து... உலகம் சுற்ற ரெடியான ஜூனியர் மேஸ்ட்ரோ

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவன், தனது ரசிகர்களுக்காக மெகா ட்ரீட் கொடுக்க தயாராகிவிட்டார்.

யுவனை இசை போதை என கொண்டாடும் ரசிகர்களுக்கு, இந்த இசை விருந்து தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுவனிசம் 25

யுவனிசம் 25

சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என இசை ரசிகர்களின் கொண்டாட்டமாக யுவன் சங்கர் ராஜா காணப்படுகிறார். இவரை இளம் இசைஞானி, ஜூனியர் மேஸ்ட்ரோ, மியூசிக் ட்ரக் என ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். காதலென்றாலும் யுவன், காதல் தோல்வியென்றாலும் யுவன் இப்படி ரசிகர்களின் வாழ்வில் அனைத்து நொடிகளையும், தனது இசையால் நீக்கமற நிறைத்துக் கொண்டே வருகிறார்.

ரசிகர்களுக்கு இசை விருந்து

ரசிகர்களுக்கு இசை விருந்து

இந்நிலையில், சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக, தனது ரசிகர்களுக்கு இசை விருந்து கொடுக்க முடிவெடுத்துள்ளார் யுவன். அதன்படி, சமீபத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தி, ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார். பதிலுக்கு அவர்களும் யுவனின் இசையை கொண்டடியுள்ளனர். முக்கியமாக மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் புக்கிங், தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

உலகம் சுற்ற ரெடியான யுவன்

உலகம் சுற்ற ரெடியான யுவன்

யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது. மேலும், மலேசியாவில் தொடர்ந்து 2 நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையும் யுவனுக்கு கிடைத்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் குறைந்தது 7 இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என யுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற யுவன், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சென்னையில் இசை விருந்து

சென்னையில் இசை விருந்து

முன்னதாக சென்னையிலும் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக யுவன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு 'யு & ஐ' என பெயரிடப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 10ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இது நடைபெறும் எனவும் யுவன் தெரிவித்துள்ளார். யுவனின் இந்த சர்ப்ரைஸை எதிர்பார்க்காத ரசிகர்கள், இசை நிகழ்ச்சியை பார்க்க மரண வெயிட்டிங்கில் உள்ளனர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் யுவனின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரலபங்களும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X