Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அனிருத் 2-2ன்னு போட்டா.. யுவன் 3-3ன்னு போட்டு இருக்காரே.. கையில் லாலிபாப்புடன் என்ன சொல்ல போறாரோ?
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெறும் லாலிபாப் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குழப்பிய நிலையில், தற்போது பிங்க் நிற உடையுடன் பக்கத்தில் ஒரு அழகான பெண்ணுடன் கையில் லாலிபாப் வைத்து நிற்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த போர்ஷன் எது என்றே புரியாமல் புலம்பித் தவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், தனது அடுத்த ஆல்பத்தை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
பிக்பாஸ் அல்டிமேட்....புதிய ஹோஸ்ட் சிம்புவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?
மாநாடு பிஜிஎம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான டைம் லூப் திரைப்படமான மாநாடு திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா மிரட்டல் பிஜிஎம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். மாநாடு திரைப்படம் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
வலிமை இசை சர்ச்சை
மாநாடு படத்தைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையில் வலிமை படம் வந்து மிரட்டப் போகுது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், பாடல்களை மட்டுமே யுவன் போட்டுள்ளார் என்றும் யுவன் போட்ட பிஜிஎம் இயக்குநர் எச் வினோத்துக்கு பிடிக்காததால் ஜிப்ரானை இசையமைக்க வைத்துள்ளார். அடுத்து அஜித்தை வைத்து அவர் இயக்கும் படத்திலும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என பெரும் சர்ச்சையே வெடித்தது. இதனால், அஜித் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் அப்செட் ஆகினர்.
லாலிபாப்
வலிமை படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் யுவன் சங்கர் ராஜாவை பார்க்க முடியவில்லை. ஆனால், படம் வெளியாவதை முன்னிட்டு வலிமை படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனது அடுத்த இசை ஆல்பத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள யுவன் வெறும் ஒரு ஹார்ட்டின் ஷேப் லாலிபாப்பின் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
பஞ்சுமிட்டாய் சட்டை
ரசிகர்களை நீண்ட நேரம் குழம்ப வைக்க வேண்டாம் என நினைத்த யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக பஞ்சுமிட்டாய் கலர் சட்டையை அணிந்து கொண்டு கையில் லாலிபாப் உடன் அருகே ஒரு கலர்ஃபுல் பாடகியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். மேலும், தனது அடுத்த ஆல்பத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.
அனிருத் பாணியில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு டூ.. டுட்டு.. டூன்னு பாடல் போட்ட அனிருத் இந்த மாதம் வந்த 2ம் தேதி மற்றும் 22ம் தேதிகளையும் விட்டு வைக்காமல் போஸ்ட்டுகளை போட்டு தெறிக்கவிட்டார். இந்நிலையில், அனிருத் 2-2 என போட்டதை பார்த்த யுவன் சங்கர் ராஜா 3-3-2022ல் தனது அடுத்த பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.
பக்கத்தில் நிற்கும் பாப்பா யாரு
யுவன் சங்கர் ராஜா போலவே பஞ்சுமிட்டாய் கலர் சட்டை போட்டுக் கொண்டு கையில் லாலிபாப் வைத்து நிற்கும் அந்த பாப்பாவை தான் தற்போது ரசிகர்கள் கூகுளில் அலசி வருகின்றனர். இந்தியாவின் இளம் பாப் ஸ்டாரான துவானி பனுசாலி தான் அவர். யுவனுடன் இணைந்து தனது அடுத்த ஹாட் ஆல்பம் பாடலை பாடியுள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை