அஜித்தின் வலிமை படத்திற்காக யுவன் சங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கசிந்த தகவல்!

சென்னை: யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. 1997ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தனது கேரியரை தொடங்கினார்.

பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, மனதை திருடி விட்டாய், நந்தா, மவுனம் பேசியதே, காதல் கொண்டேன், புதிய கீதை, 7ஜி ரெய்ன்போ காலனி, மன்மதன், ராம், வல்லவன், பருத்தி வீரன், தீபாவளி, தாமிரபரணி, பில்லா, யாரடி நீ மோகினி என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நா முத்துக்குமாரின் மறைவு

நா முத்துக்குமாரின் மறைவு

பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்குமான கெமிஸ்ட்ரி அவர்களின் கூட்டணியில் வெளியான பாடல்களின் ஹிட்டிலேயே தெரியும். நா முத்துக்குமார் மறைவுக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சற்று தொய்வடைந்து போனார்.

கடைசியாக மாநாடு படம்

கடைசியாக மாநாடு படம்

இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபுல் பார்மில் பட்டையை கிளப்பி வருகிறார். கடைசியாக அவரது இசையில் மாநாடு படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் இடம்பெற்ற யுவனின் பின்னணி இசை அப்ளாஸை அள்ளியது.

10க்கும் மேற்பட்ட படங்கள்

10க்கும் மேற்பட்ட படங்கள்

இதனை தொடர்ந்து தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. மாமனிதன், பிளான் பண்ணி பண்ணனும், குருதி ஆட்டம், வலிமை, நானே வருவேன், எரியும் கண்ணாடி, வீரமே வாகை சூடும், விருமன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவனின் சம்பளம்

யுவனின் சம்பளம்

இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

Recommended Video

Valimai படத்தின் Shooting-ல் தல உடன் நடந்த சுவாரசிய சம்பவம் | H.Vinoth Exclusive
1.25 கோடி சம்பளம்

1.25 கோடி சம்பளம்

இந்தப் படத்தில் இருந்து இதுவரை நாங்க வேற மாரி, விசில் தீம் மியூஸிக் மற்றும் அம்மா பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா 1.25 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X