கீபோர்டில் ஹேப்பி பர்த்டே மியூசிக்.. அப்பாவுக்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன யுவன்!
சென்னை: அப்பா இளையராஜாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் க்யூட்டான வீடியோ ஒன்றை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார் யுவன் சங்கர் ராஜா.
இசைஞானி இளையராஜாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய திரைத்துறையை சார்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் இசை அரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
#HBDilayaraja இசைக்கு இன்று பிறந்தநாள் விழா❤ pic.twitter.com/8vyuYGvJ8a
— அன்பானவன் (bharath2809) June 2, 2021
ஹாஷ்டேக் டிரெண்டிங்
உலகத் தமிழ் ரசிகர்களை தனது இசையால் 40 வருடங்களுக்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஒரு பேராற்றல் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDRajasir என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குடும்பத்தில் ஒருவர்
"ஒத்தப் பூடங்கூட இல்லையப்பா.. எங்க குடும்பத்துல ஒருத்தரப்பா" என தமிழ் மக்களின் குடும்பங்களில் ஒருவராக காலம் காலமாக வாழ்ந்து வருகிறார் இளையராஜா. அவர் பாடலை கேட்காமல் பலருக்கும் ஒரு நாள் கூட நகராத நிலை இன்னமும் தமிழ்நாட்டில் இருப்பது தான் அந்த மேஸ்ட்ரோவின் மாயாஜாலம்.
Recommended Video

இசைத்தமிழ் நீ செய்த
திருவிளையாடல் படத்தில் இடம்பெறும் "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை" என்ற பாடல் வரிகள் இவரை தவிர வேறு யாருக்கு பொருந்தும் சொல்லுங்கள் என ஏகப்பட்ட ரசிகர்களும் இளையராஜாவை வாயாற வாழ்த்தி வருகின்றனர்.
Happy birthday daddy❤️❤️❤️ #Throwback #MaaManithan pic.twitter.com/fZc5BTLRUT
— Raja yuvan (thisisysr) June 2, 2021
ஹேப்பி பர்த்டே டேடி
தனது மகளுக்கு அப்பா இளையராஜா ஹேப்பி பர்த்டே பாடலை கீபோர்டில் வாசிக்க கற்றுக் கொடுக்கும் அழகான த்ரோபேக் வீடியோவை ஷேர் செய்த யுவன் சங்கர் ராஜா "ஹேப்பி பர்த்டே டே" என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி உள்ளார்.

இருவரும் இணைந்து
யுவன் சங்கர் ராஜாவும் இளையராஜாவும் ஒன்றாக இணைந்து முதன்முதலாக ஒரு படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள மாமனிதன் படம் தான் அது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் இரு பாடல்களும் இளையராஜா மற்றும் யுவனின் இசையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த இசையரசர் இன்னும் பல ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ இசையுலகம் சார்பாக வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











