சிறுவயது நினைவை பகிர்ந்த இசையமைப்பாளர்..அரிய புகைப்படம் இதோ !

சென்னை : அஜித் குமார் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அதை தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்திற்கும் இசையமைக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி என்றாலே சூப்பர் ஹிட் பாடல்களுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் மாரி 2 திரைப்படத்தில் வித்தியாசமான இசையில் உருவான ரவுடி பேபி பாடல் யூட்யூபில் அதிக பார்வையாளர்கள் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இசைக்குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயதிலிருந்தே இசையோடே வளர்ந்த யுவன் சங்கர் ராஜா இப்பொழுது தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது.

இசை மேல்

இசை மேல்

இசைஞானி இளையராஜாவிற்கு பிறகு இசையமைப்பாளருக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றால் அது கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு தான். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒரு இவரின் இசை மேல் பைத்தியமாக உள்ளனர்.

மங்காத்தா

மங்காத்தா

படத்தின் பாடல்கள் ஆனாலும் சரி பிஜிஎம் ஆனாலும் சரி யுவன் ஷங்கர் ராஜாவை அடித்துக்கொள்ள இன்று வரை தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக பில்லா, மங்காத்தா என பல படங்கள் இந்த லிஸ்டில் சொல்லலாம்.

வலிமை

வலிமை

கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தனது இனிமையான இசையின் மூலம் மயக்கி வரும் யுவனின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் மட்டுமல்லாமல் யூட்யூப் தளத்திலும் சாதனைக்கு மேல் சாதனை செய்துவரும் நிலையில், இப்பொழுது அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் வலிமை திரைப் படத்திற்கு இசையமைத்து வரும் அதேசமயம் சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்கும் இவர்தான் இசை போட்டு வருகிறார்.

பின்னால் பாடகி சித்ரா

பின்னால் பாடகி சித்ரா

இவ்வாறு தனது இசையால் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வரும் யுவன் ஷங்கர் ராஜா இப்பொழுது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் குட்டி பையனாக இருக்கும் யுவனுக்குப் பின்னால் பாடகி சித்ரா நின்று கொண்டிருக்கிறார். இந்த அரிய புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் பேராதரவோடு செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X