சிவாஜியுடன் யுவன்சங்கர்ராஜா…இனிமையான நினைவை பகிர்ந்தார் யுவன்!

சென்னை : தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இசையமைப்பாளர்களில் இளசுகளை மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் ரசிக்க வைக்கக் கூடிய மிகச் சிறந்த பாடல்களை கொடுத்து முன்னணியில் இருப்பவர் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா.

யுவன் சங்கர் ராஜா, தனுஷ் இணையும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி மவுசு இருக்கின்ற நிலையில், கடைசியாக இவர்கள் இணைந்து பணியாற்றிய மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் 100 பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் யுவன்சங்கர்ராஜா சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போது திடீரென வைரலாகி வருகிறது.

புது ஸ்டைலை உருவாக்கி

புது ஸ்டைலை உருவாக்கி

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, தனது இசையில் அப்பாவின் இசை சாயல் சற்றும் இருக்கக்கூடாது என நினைத்த யுவன் சங்கர் ராஜா தனக்கென ஒரு புது ஸ்டைலை உருவாக்கி இன்றுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு இளைஞர்களிடையே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்துவரும் நிலையில், அவர் இசையமைத்த எண்ணற்ற திரைப்படங்கள் பாடல்களுக்காகவே பல நாட்கள் திரையில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

100 கோடி பார்வையாளர்களை

100 கோடி பார்வையாளர்களை

அந்த வகையில் தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணையும் கூட்டணி என்றாலே தனிச்சிறப்பு பெற்றிருக்கும் நிலையில் கடைசியாக இருவரும் இணைந்து பணியாற்றிய மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்ற நிலையில், அதில் ரவுடி பேபி பாடல் யூடியுப் தளத்தில் 100 கோடி பார்வையாளர்களை கடந்து தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது.

சிறுவயது புகைப்படம்

சிறுவயது புகைப்படம்

இவ்வாறுதான் இசைக்கும் இசையால் அனைவரையும் மயங்க வைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

அப்பாவி பையன்

அப்பாவி பையன்

அதில் சிவாஜிகணேசன் முரட்டு மீசையுடன், எப்போதும் போல கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருக்க அருகில் அப்பாவி பையன் போல அமைதியாக நின்று கொண்டு யுவன்சங்கர்ராஜா போஸ் கொடுத்திருக்கும் இந்த அரிய புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X