என்னோட சின்ன போட்டோகிராபர்... தந்தையர் தின வாழ்த்து சொன்ன யுவன்
சென்னை : சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி தனது வாழ்த்துக்களை யுவன் சங்கர் ராஜா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சின்ன போட்டோகிராபரையும் அவர் அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். தந்தையாக இருப்பதன் பூரிப்பு அவரது முகத்தில் தெரிகிறது.

பாடல்கள் அறிமுகம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏராளமான படங்களை வெற்றிப் படமாக்கியுள்ளார். தொடர்ந்து முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சில படங்களில் பாடல்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து அந்த பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

சமூக வலைதளத்தில் பரபர
நேற்றைய தினம் மாநாடு படத்தின் பாடலின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார். தொடர்ந்து தன்னுடைய இடையறாத இசைப்பயணத்திலும் சமூக வலைதளங்களில் பரபரப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு சிறப்பான விஷயங்களுக்கு உடனுக்குடன் தன்னுடைய பாராட்டுக்களை பகிர்ந்து வருகிறார்.

வீடியோ பதிவு
இந்நிலையில் இன்றைய தினம் சர்வதேச தந்தையர் தினத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு சிறப்பான தந்தை என்பதையும் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அவருடைய மகள் யுவனை போட்டோ எடுக்கும் வீடியோ அது.
புகைப்படம் எடுத்த குட்டி தேவதை
தன்னுடைய சிறிய போட்டோகிராபரை அவர் இந்த வீடியோவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மகள் எடுக்கும் புகைப்படத்திற்காக ஒரே மாதிரியான போஸுடன் அவர் சிரித்தபடியே அமர்ந்துள்ளார். அவருடைய குட்டி தேவதையும் அவரை புகைப்படம் எடுத்து தள்ளுகிறது. இந்த வீடியோவில் தந்தையாக இருப்பதன் பெருமிதம் யுவனின் முகத்தில் தென்படுகிறது.


Click it and Unblock the Notifications











