எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு.. GOAT அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பதாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே மாஸ்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்ததாலும் லியோ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் லியோ ஏமாற்றியது. முக்கியமாக திரைக்கதை, கதை என எதிலுமே புதுதாக ஒன்றுமே இல்லை. வேண்டுமென்றே எல்சியூவில் படத்தை கனெக்ட் செய்திருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

GOAT: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங்கை நடத்தினார் வெங்கட் பிரபு.
தடைப்பட்ட ஷூட்டிங்: விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்த சூழலில் பாடகியும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து GOAT ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. யுவனும், வெங்கட் பிரபுவும் தங்களது சகோதரியை நினைத்து சோகத்தின் உச்சத்துக்கே சென்றனர்.
தொடங்கிய ஷூட்டிங்: தடைப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பக்ரீத் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வெங்கட் பிரபு மும்முரமாக பணியாற்றிவருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் விஜய் டபுள் ஆக்ஷன் என்றும்; டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாவதாகவும் ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் மேஜிக்: இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதற்கான காரணங்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். கடைசியாக விஜய்க்கு அவர் புதிய கீதை படத்துக்கு இசையாமித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்களாக விஜய்க்கு இசையமைக்கவில்லை. தற்போது GOAT படத்தில் இசையமைப்பதால் கண்டிப்பாக இசையில் யுவன் ஷங்கர் ராஜா பெரிய மேஜிக் செய்வார் என்று விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
யுவன் பேச்சு: இந்நிலையில் GOAT படம் பற்றி யுவன் ஷங்கர் ராஜா பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. படம் குறித்து பேசிய அவர், "படம் பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சீக்கிரமே ஆரம்பமாகவிருக்கின்றன. அப்போது அனைத்து அப்டேட்களும் ரசிகர்களுக்கு முறையாக கிடைக்கும். இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு இருக்கும் என தெரியும். அதே அளவுதான் எனக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அனைத்தும் நன்றாக போய்க்கொண்டிருக்கின்றன" என்றார்.
முன்னதாக விஜய் சில நாட்களுக்கு முன்பு 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத அவர் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்பது குரிப்பிடத்தக்கது. GOAT படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிக்கும் அவர் அதோடு சினிமாவிலிருந்து விலகுகிறார்.


Click it and Unblock the Notifications











