Thalapathy 68 - மங்காத்தா போல்தான் தளபதி 68 இருக்குமா?.. யுவன் சொன்ன அட்டகாசமான பதில்

சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68) மங்காத்தா போல்தான் தளபதி 68ம் இருக்குமா என்ற கேள்விக்கு யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் படமானது வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதாகவும் 560 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Yuvan Shankar Raja Talks about Thalapathy 68 Movie Music

தளபதி 68 ஸ்டார்ட்: இதற்கிடையே ஏற்கனவே அறிவித்தபடி லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 படத்தின் பூஜை நடந்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இப்போதுதான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜை: பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்த பூஜை தொடர்பான வீடியோவும் பூஜையில் கலந்துகொண்டவர்கள் தொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகின. தளபதி 68ல் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

ஷூட்டிங்: பூஜையை முடித்த கையோடு ராஜுசுந்தரம் கோரியோகிராஃபியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடனம் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்தப் பாடல் நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகவும் மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பிரசாந்த் விஜய்க்கு நெருங்கிய நண்பராகவும்; மைக் மோகன் வில்லனாகவும் நடிக்கிறாராம்.

எப்படி இருக்கும்: படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதால் படத்தின் இசை மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.குறிப்பாக அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றுதான் யுவன் பலரால் அழைக்கப்படுகிறார். அதற்கேற்றபடிதான் அஜித்துக்கு அவர் போட்ட இசையும் இருந்தது. அதிலும் பில்லா, மங்காத்தா தீம் மியூசிக் எல்லாம் இப்போது கேட்டாலும் புல்லரிக்கும்.

எனவே அஜித்துக்கு எப்படி இசையமைத்தாரோ அதேபோல்தான் விஜய்க்கும் அவர் இசையமைக்க வேண்டும் என்பது தளபதி ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யுவன் ஷங்க ராஜாவிடம் தளபதி 68 இசை மங்காத்தா போல் இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யுவன் ஷங்கர் ராஜா கண்டிப்பாக இருக்கும் என்றார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தற்போது பாங்காக்கில் நடந்துவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X