இசைஞானியின் இனிய சர்ப்ரைஸ்.. ரசிகர்களை திக்கமுக்காட வைக்கும் நியூஸ்!

சென்னை: இசைஞானி என்றால் அது இளையராஜா தான் என்று குழந்தையும் சொல்லும். அந்த அளவிற்கு இசை என்ற கயிறால் அனைவரின் மனங்களை கட்டியவர். சமீப காலமாக அவர் பல சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைத்து அனைவரிடமும் இணக்கமாக போகும் சூழலை காண முடிகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன பின்னரும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

yuvan shankar raja to join hands with Ilayaraja

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் 'முதல்முறையாக நானும் அப்பாவும் இணைந்து 'மாமனிதன்' படத்தில் பணிபுரிந்து உள்ளோம். எனவே 'மாமனிதன்' படத்தின் ஆல்பம் இசை பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த டுவீட்டை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவதால் இசை வெளியீட்டின்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா மற்றும் மகன் இருவரும் இணைந்து நடிப்பது பழசு. ஆனால் அப்பா மற்றும் மகன் என இரு இசை அமைப்பாளர்கள் இணைவது செம ட்ரீட்டு. இசைஞானியும் இளைய இசைஞானியும் இணைந்து கொடுக்கும் சர்ப்ரைஸை சந்திக்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

yuvan shankar raja to join hands with Ilayaraja

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராயல்டி உரிமை தொடர்பாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பி-க்கும் இடையே பிரச்னை வெடித்தது. இது இசை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. சினிமாவிலும் இருவரும் இணையவில்லை. அண்மைக் காலங்களில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. கலந்து கொண்டு பாடவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வந்தது.

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக இளையராஜாவை சந்தித்தார் எஸ்.பி.பி. இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர்.

அதே போன்று வட துருவமும் தென் துருவமும் இணைந்தது போல இளைய ராஜாவும் ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றிய அதிசயமும் நிகழ்ந்தது. இளையராஜா பாட ரஹ்மான் கீ போர்ட் வாசிக்க அந்த அதிசயமும் நடந்தது. இந்த இசைத் தாயின் தங்க புதல்வனின் வயது 75. அந்த முதிர்ச்சிதான் இத்தகைய வரிசையான செயல்பாட்டிற்கு காரணமா என்று தெரியவில்லை. 28 ஆண்டுகளாக பிரிந்துள்ள கவிஞர் வைரமுத்துவும் இளைய ராஜாவும் கூட விரைவில் இணையலாமோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X