நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!

By

சென்னை: தனது நிறுவனங்கள் சார்பில் யாரும் ஒப்பந்தங்கள் செய்தால், அதற்கு தான் பொறுப்பாக முடியாது என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, முன்னனி ஹீரோ படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

கூடவே தனது ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இவர் தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படம் வரவேற்பு பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ஆலிஸ் மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன்
படங்களைத் தயாரித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

பொறுப்பாக முடியாது

பொறுப்பாக முடியாது

மேலும், பல படங்களின் இசை உரிமையையும் பெற்றுள்ளார். மாமனிதன் படத்தை வெளியிடும் முயற்சிகளில் அவர் இருக்கிறார். இந்நிலையில், தனது நிறுவனங்கள் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தனது நிறுவனங்கள் சார்பில் தனக்குத் தெரியாமல் யாரும் ஒப்பந்தங்கள் செய்தால், அதற்கு தான் பொறுப்பாக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

யுஐ ரெக்கார்ட்ஸ்

யுஐ ரெக்கார்ட்ஸ்

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: என்னுடைய ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் இதை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை.

பணப் பரிவர்த்தனை

பணப் பரிவர்த்தனை

அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இவ்வாறு யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். யுவன் இப்படி திடீரென்று அறிக்கை வெளியிட்டிருப்பது சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X