போதைப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்..திடீரென யுவன் போட்ட ட்வீட்.. குழம்பிய பேஃன்ஸ்!

சென்னை : போதைப்பொருள் மற்றும் உங்களை அடிமையாக்கும் பொருள்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் என யுவன்சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் எங்களின் Drug Dealer நீங்கள்தான் என்று கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இருப்பினும் சில ரசிகர்கள் இவர் எதுக்கு இப்படி ஒருபதிவு போட்டார் என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

லவ் டுடே

லவ் டுடே

பின்னணி இசையில் தனி ராஜாங்கம் நடத்தி கொண்டிருந்த இளையராஜாவுக்கு பின் அந்த யுவன் சங்ககர் ராஜா பிடித்துள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதன். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் டுடே, இப்படத்திற்கு யுவன் சங்கரை ராஜா இசையமைத்துள்ளார். ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளார்.

4ந் தேதி ரிலீஸ்

4ந் தேதி ரிலீஸ்

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லவ் டுடே படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பச்சை இலை பாடல்

பச்சை இலை பாடல்

இப்படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியானது இதில். பச்சை இலை இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பாட்டின் லிரிக்கல் வீடியோ யூ ட்யூபில் வெளியான ஒரே நாளில், 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சாச்சுட்டாளே, என்னை விட்டு ஆகிய பாடல்கள் யூட்யூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

விலகி இருங்கள்

விலகி இருங்கள்

இந்த பாடலின் வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதையடுத்தே, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போதைப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட்டரில், பச்சை இலை பாட்டை நீங்கள் கொண்டாடி வருவதை அறிந்தேன். வேடிக்கையான சூழலுக்கு என்று உருவாக்கப்பட்ட வேடிக்கையான பாடல் அது. ஆனால், நிஜ வாழ்வில், போதைப்பொருள் மற்றும் உங்களை அடிமையாக்கும் பொருள்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். இது எனது வேண்டுகோள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X