அதிர்ச்சி.. இந்தியாவில் 4ல் ஒரு பெண் குழந்தை.. பாலியல் தொல்லை குறித்து யுவன் சங்கர் ராஜா ட்வீட்!
சென்னை: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஈவு இரக்கமற்ற முறையில் கொடியவர்களால் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தொடர்ந்து கார்கி, சுழல் வெப்சீரிஸ், சித்தா உள்ளிட்ட படங்கள் சுட்டிக் காட்டி வருகின்றன. அதே சமயம் அதிகளவில் போதைப் பொருள் பயன்பாட்டையும் சினிமா காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கமல்ஹாசன், விஜய், ஜெயம் ரவி, மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி, இயக்குநர் ஜி. மோகன் உள்ளிட்ட பலர் வீடியோ மற்றும் ட்வீட் மூலமாக தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தினமும் நடக்குது: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், இது முதல் முறையல்ல, இது கடைசி முறையாகவாவது இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாக இருந்தாலும் தினமும் நடக்கும் இந்த கொடூரத்தை தடுக்க வழிகளே இல்லாமல் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது போல யாரை பார்த்தாலும் ஒருவித அச்ச உணர்வுடனே காணப்படுகின்றனர்.
4ல் ஒரு பெண் குழந்தை: 18 வயது நிறைவடைவதற்கு முன்னதாக 4ல் ஒரு குழந்தை பாலியல் தொல்லைக்கு பலியாகிறது என்றும் 6ல் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறது என்கிற அதிச்சி தகவலை யுவன் சங்கர் ராஜா தற்போது ட்வீட் போட்டுள்ளார். இந்தியாவில் அதிகபட்சமாக 28.9 சதவீதம் குழந்தைகள் சிறு வயதிலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்கிற அதிர்ச்சி செய்தியையும் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
குட் டச் பேட் டச்: என்ன தான் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுத்தாலும் போதை வெறியில் திரியும் கயவர்களுக்கு அது தெரிந்தால் தானே குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொல்லைக்கு பலியாகாமல் தப்பிப்பார்கள் என்றும் போதைப் பொருள் புழக்கமில்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி செய்தால் தான் நமது குழந்தைகளை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற முடியும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











